விந்தியா

இலக்கியத்தில் மிக இயல்பாகவே சில அநீதிகள் நடைபெறுவதுண்டு. அதிலொன்று முதன்மையான இலக்கிய ஆளுமைகள் வெவ்வேறு காரணங்களால் சில எழுத்தாளர்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது. விந்தியா என்னும் இலக்கியவாதியை தமிழ் விக்கி இல்லையேல் நான் அறிந்துகொண்டிருக்கப்போவதில்லை. ஏனென்றால் அவரைப்பற்றி நவீனத் தமிழிலக்கியக் களத்தில் ஒரு சொல்கூட எழுதப்படவில்லை. காரணம், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா முதல் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் வரையிலான விமர்சகர்கள் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருக்குமே கி.வா.ஜகந்நாதனின் கலைமகள் இதழ்மேல் முழுமையான புறக்கணிப்பு இருந்தது

விந்தியா

விந்தியா
விந்தியா – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவிலா எலும்புகளின் பிரகடனம் -விக்னேஷ் ஹரிஹரன்
அடுத்த கட்டுரைஅதிமானுடரின் தூக்கம்