தேவர்களின் நடனம் – கடிதம்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க

எழுகதிர் வாங்க 

அன்புள்ள ஜெ,

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்படித்துக்கொண்டிருக்கிறேன். அதில்உயிரின் மூலவிசைகட்டுரையில் மாயாண்டிச்சாமி பற்றி இப்படி எழுதியிருந்தீர்கள்

மாயாண்டிச்சாமி தன் வாழ்நாள் முழுக்க நல்லவை எவற்றையும் செய்யவில்லை. இளமையிலேயே மாயாண்டி எப்படி இறப்பார் என அருள்வாக்கு வந்துவிடுகிறது. அவர் எவருக்கும் அடங்காதவராக வளர்கிறார். தனக்கு முதல்மரியாதை தராத பூசாரியின் தாம்பாளத்தை எட்டி உதைக்கிறார். தன்னை பிடிக்கவந்த அரசரின் படைகளை ஒளிந்திருந்து அடித்து துரத்துகிறார். விரும்பிய பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்து அனுபவிக்கிறார். நூற்றெட்டு பெண்களை அப்படி அவர் அடைகிறார். கடைசியில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வஞ்சகமாகக் கொல்கிறார்கள். அவர் ஆன்மா அடங்காமல் வந்துஎனக்கு கோழி கொடு! கொடை கொடு! இல்லாவிட்டால் உன் குலத்தை அழிப்பேன்என்கிறது. மக்கள் அஞ்சி அவரை வழிபடுகிறார்கள்.

மாயாண்டிசாமி பிறந்த நாள் முதல் கொல்லப்படுவதுவரை செய்தவை அனைத்தும் காமத்தாலும் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் செய்யப்பட்ட வீரசாகசங்கள்தான். அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டபோது தெய்வமானார். சந்தன வீரப்பனை அவரது சாதியினர் தெய்வமாக வழிபடுவதன் பண்பாட்டுகூறு இதுவே“.

இந்த கட்டுரையை படித்தபின் நீங்கள் எழுதியகரவுசிறுகதை நினைவுக்கு வந்தது. அச்சிறுகதையில் தங்கனை கண்டதும் நின்று துள்ளி குதித்து சுழன்று எழுந்த மாயாண்டி சாமிடேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!”  என்று கூறியதையும், சுடலை மாடனாக மாறிய தங்கனும் மாயாண்டிசாமியும் சேர்ந்து  வெறியாட்டம் ஆடியதையும் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இனி அந்த ஆட்டத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்.

மணிமாறன்

 *

அன்புள்ள மணிமாறன்,

தொல்குடித் தெய்வங்கள் பெரும்பாலும் அப்படித்தான் உள்ளன. மனிதர்கள் போடும் எல்லா ஒழுக்க, அற கணக்குகளுக்கும் அப்பாற்பட்ட ஆற்றல்கள் அவை. இந்தியன், சீயஸ் எல்லாமே அப்படித்தான். அவற்றை புரிந்துகொள்ள நவீனத்துவம் (மார்க்ஸியம்) மற்றும் அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய மனநிலைகளை கடந்துசெல்லவேண்டும். அதைத்தான் பின்நவீனத்துவ உளநிலை என்கிறோம்.

ஜெ

—————————————————

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க 

முந்தைய கட்டுரைஇன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-2
அடுத்த கட்டுரைதண்ணீரின்மை – உஷாதீபன்