சோழர் பாசனம் – கடிதம்

 

ஒரு முக்கியமான முன்னெடுப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்கள் “ஒரு முக்கியமான முன்னெடுப்பு” பதிவை வாசித்தேன்.

எந்த மன்னராட்சியும் அதற்கான ஒடுக்குமுறை, அதிகார அடுக்குமுறையுடனேயே இருக்கும். அதைவிட பலமடங்கு கொடூரமான ஒடுக்குமுறையும் அதிகார அடுக்குமுறையும் கொண்ட கம்யூனிச சர்வாதிகார அரசுகளை விழுந்து விழுந்து கொண்டாடியவர்கள் அதை விமர்சிக்கும் தகுதி அற்றவர்கள். மக்களாட்சியிலும் அதற்குரிய அடக்குமுறையும் அதிகார அடுக்கும் இருப்பதைக் காணலாம்.

நாம் பொற்காலங்களை பின்னால்திரும்பி பார்த்துக் கண்டடைய வேண்டியதில்லை. அதை எதிர்காலத்தில் தேடுவோம். 

சோழர்களே தமிழகத்தின் பாசனக்கட்டுமானத்தின் அடித்தளத்தை அமைத்தவர்கள். அவர்கள் அமைத்த பாசன ஒழுங்கையே இன்றும் கடைப்பிடிக்கிறோம். அதன்மேல்தான் மொத்த தமிழகப்பொருளியலும் பண்பாடும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ் தெலுங்கானாவில் ராஷ்டிரகூட ஏரிச்சங்கிலி எனப்படும் மாபெரும் பாசனத்திட்டத்தை புதுப்பித்தார். ராஷ்டிரகூடப்பேரரசி ருத்ராம்பா தேவியால் உருவாக்கப்பட்ட ஏரிவரிசை அது. நூறாண்டுகளுக்கும் மேலாக பராபரிப்பின்றி கிடந்தது. அது தெலுங்கானாவின் வாழ்க்கைமுறையையே மாற்றியது.

கோயம்புத்தூரில் 2000-க்கில் குடிநீர் பிரச்னை ஏற்பட்ட போது சிறுதுளி அமைப்பானது மக்களிடையே பாரம்பரிய குளங்களை குறித்த விழிப்புணர்வு ஊட்டி கோவை சிறுவாணி மலையில் இருந்து நொய்யல் நதி  மற்றும் அதன் வழியில் இருந்த குளங்களை தூர் வாரி மீண்டும் பயனுக்கு கொண்டு வந்தது. சிறுதுளியின் இந்த நடவடிக்கையால் கோவையில் நிலத்தடி நீர் பிரச்னை சரியானது.

சிறுதுளி அமைப்பின் செயல்பாடு அருகில் உள்ள மற்ற சிறு நதிகளை மற்றும் குளங்களை மீட்டெடுக்கும் அமைப்பினருக்கு மிக்க ஊக்கமாக இருக்கிறது.

தங்கள் பதிவில்  குறிப்பிட்ட தெலுங்கானா  ஏரிச்சங்கிலி குறித்து இணையத்தில் தேடியபோது கீழ்கண்ட செய்திப்பதிவு கிடைத்தது :

https://telanganatoday.com/chain-of-tanks-in-telangana-built-by-chola-kings-v-prakash-rao

அதில் தெலுங்கானா மாநில நீராதாரங்கள் மேம்பாட்டு வாரிய தலைவர் திரு. வீரமல்லா பிரகாஷ் ராவ் அவர்கள், பலர் ஏரிச்சங்கிலி காகதீய ஆட்சியின் போது உருவாக்க பட்டது என்று கருதுகிறார்கள், ஆனால் உண்மையில் சோழர்கள் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பனகல் ஏரியும் மற்றும் அதன் சங்கிலியில் உள்ள ஏரிகளையும் உருவாக்கினர் என்கிறார்.

மிக்க நன்றி.

இப்படிக்கு
அன்புடன்
சந்தானம்

முந்தைய கட்டுரைஅறைக்கலன் -அவதூறு
அடுத்த கட்டுரையாழ்ப்பாணமும் தமிழும், கடிதங்கள்