கலீர் கலீர்!

1979 ல் நான் கல்லூரிக்குள் நுழைந்த காலத்தில் வெளிவந்த பாடல். தேவதை என்னும் சினிமாவுக்காக ஷியாம் இசையமைத்தது. பி.என்.மேனன் இயக்கிய இந்தப்படம் அக்காலகட்டத்தில் ஒரு கலையம்சம் கொண்ட ஆக்கம். நெசவுத்தொழில் செய்யும் பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. இளையராஜா கொடிபறந்த அக்காலத்திலேயே இப்படத்தின் பாடல்கள் அன்று பெரிய பித்தாக இருந்தன. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. அனேகமாக எவருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை (மாந்தளிரே மயக்கமென்ன இன்னொரு பாடல்)

ஷியாம் (இயற்பெயர் சாமுவேல் ஜோசப்) மலையாளத்தில் எண்பதுகளில் மிக அற்புதமான பல பாடல்களை அமைத்தவர். தமிழில் குறைவாகவே இசையமைத்திருக்கிறார். மழைதருமோ என் மேகம் போன்ற பல பாடல்கள் அன்று தமிழில் ஓர் அலையை உருவாக்கின. ஷியாம் சலீல் சௌதுரியின் இசைநடத்துநராக இருந்தவர்.

பி.என்.மேனன் முதன்மையாக கலை இயக்குநர்.மலையாளத்தின் முதன்மை படங்களில் சிலவற்றை இயக்கியவர். ஓளவும் தீரவும், செம்பருத்தி ஆகியவை இன்றும் பார்க்கப்படுபவை. இயக்குநர் பரதனின் தாய்மாமன்

மாந்தளிரே மயக்கமென்ன?

முந்தைய கட்டுரைபீட்டர் செல்லர்ஸ் – கடிதம்
அடுத்த கட்டுரைதமிழர் திருநாள்