தமிழ் விக்கிக்கு பதிவுகள் போடும்போது ஒன்றைக் கவனித்தேன். சலிக்காமல் செயலாற்றி, மாபெரும் பணிகளைச் செய்தவர்களில் முதலிடம் எப்போதுமே துறவிகளுக்குத்தான். பெருஞ்செயலாற்றிய பலர் குடும்பச்சிக்கல்கள், நிதிச்சிக்கல்கள், முதுமையின் தனிமை என செயலிழந்துபோகிறார்கள். துறவிகள் எய்யப்பட்ட அம்புபோல சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
என அவர்களின் பட்டியல் மிக நீளமானது. அவர்களில் ஒருவர் குன்றக்குடி அடிகளார். செயலூக்கம் மிக்க கணங்களால் ஆன முழு வாழ்க்கை அவருடையது