“நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்குச் சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள். அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வைக் கண்டுகொள்வது இவை தான் அவள் செய்ய வேண்டியது.” நாவலில் வரும் வரி. எல்லா ஆணுக்குள்ளும் இருக்கும் ஆணவம். அந்த ஆணவம் உடையும் கணத்திலேயே ஒரு வாலிபன் முழு ஆணாக மாறுகிறான். ஓர் ஆணால் அந்த ஆணவத்தை அத்தனை எளிதாக விட சாத்தியமில்லை. அதற்கு நிகரான எடை கொண்ட ஆணவம் அவனை வந்து மோத வேண்டும். எனவே அது சிலருக்கு உக்கிரமான வலியைத் தந்து நிகழ்கிறது. சிலருக்கு நிகழாமலே இருந்துவிடுகிறது. ஹரனுக்கு அந்தப் பயணத்தில் மைத்ரியின் மூலம் நிகழ்கிறது.
பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்