அன்புள்ள நண்பர்களுக்கு,
இந்த ஆண்டு திரு.ஜெயமோகன் அவர்களின் மணிவிழா ஆண்டு.
அவரை கௌரவிக்கும் பொருட்டு கோவையில் கோவை நன்னெறிக்கழகமும், வாசக நண்பர்களும் இணைந்து ஒருவிழா எடுப்பதென்று முடிவு செய்திருக்கிறோம். விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் வாசகர்களும் நண்பர்களும் திரளாக எங்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
நாள் : செப்டம்பர் 18, 2022 ஞாயிற்றுக்கிழமை
இடம் : சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி கோவை
நேரம் : மாலை 4.30 மணி முதல் 9.00 வரை
அனைவரும் வருக என்று அன்புடன் அழைக்கிறோம்!
கோவை நன்னெறிக்கழகம் மற்றும் வாசக நண்பர்கள்