கீதைத் தருணம், கடிதங்கள்

கீதைத்தருணம்

அன்புள்ள ஜெ

கீதைத்தருணம் கட்டுரையை நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் வாசித்தேன். அன்று ஏற்பட்ட அந்த உலுக்கல் இன்றும் ஏற்பட்டது. நெருப்பே நீராக எரியும் அந்தச் சிதை. கடுந்துயருக்கு பிறகு வரும் தெளிவு. எத்தனை நுட்பங்கள். வாழ்க்கை வழியாக கீதைக்குள் செல்லும் ஒருவர் என்னும் சித்திரம் முன்பு இருந்தது. கீதை என்னும் ஆற்றை நோக்கி உடலில் தீப்பற்றி எரிய ஓடிக்கொண்டிருப்பவாராக இன்று அக்கட்டுரை காட்டியது

ராஜ்

*

அன்புள்ள ஜெ,

கீதைத்தருணம் கட்டுரை முன்பு வாசித்தது. உங்கள் மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. அனுபவமும் தத்துவமும் அற்புதமாக இணையும் கட்டுரை அது.இன்று வாசிக்கும்போது வெண்முரசுக்கு பிறகு புதிய அர்த்தம் வருகிறது. மகாபாரதப் போர் முடிந்துதான் நீங்களும் கீதையை அணுகியிருக்கிறீர்கள்

ஆனந்த்குமார் கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைசாரு, இரு கேள்விகள்
அடுத்த கட்டுரைசித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சாதிமாற்றம்!