என் கவிதைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் விமர்சனப் பார்வையில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதும் நவீன கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு,கீழ்க்கண்ட எளிய வலைப்பூ. முடிந்தவரை தொகுக்கப் பார்க்கிறேன். நன்றி!

http://www.ariyavai.blogspot.com/

அன்புடன்,
கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

ஆச்சரியமாக இருக்கிறது. நான் பல்வேறு கட்டங்களில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதைகளை இப்படி ஒரே இடத்தில் பார்க்கும்போது என்னையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது. இதன் பின் உள்ள உழைப்பு ஆச்சரியமளிக்கிறது

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் (2011) – 1
அடுத்த கட்டுரைஅறம்செய விரும்பு