யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அழகிய புகைப்படங்கள் இரண்டு கிடைத்தன. யானைடாக்டர் என்ற பேரில் இந்தக்கதை மட்டும் சிறிய நூலாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக இது தகுதியான வாசகர்களுக்கு வழங்கப்படும். புத்தகம் அச்சாகும் முன் கிடைத்திருந்தால் இந்தப்படங்களை அதில் சேர்த்திருக்கலாம்
மேலும் சில நண்பர்கள் இந்த கதையை தங்கள் அமைப்புகளுக்காகச் சிறு நூலாக வெளியிடலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதைச் சேர்ந்து செய்வது நல்லது
யானைடாக்டர் கெ அவர்களைப்பற்றி பிபிசி எடுத்த ஆவணப்படம் எவரிடமாவது இருந்தால் வாங்கி அதையும்வலையேற்றம் செய்யலாம்.
யானைடாக்டர் கதையை இலவச நூல் பற்றிய தகவல்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தை அணுகலாம்
யானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள