நலம்தானே?
உங்கள் இணையப்பக்கம் இப்போது ஒட்டுமொத்தமாக ஒரு கலைவையாக கொந்தளித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபக்கம் பொன்னியின் செல்வன் கட்டுரைகள். இன்னொரு பக்கம் அறம் ஆங்கில மொழியாக்கம் பற்றிய கட்டுரைகள். இன்னொரு பக்கம் மதம், தத்துவம். கூடவே இலக்கியம். ஆனால் இப்போதெல்லாம் இலக்கியம் மிகவும் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இலக்கியம் பற்றிய விவாதங்கள் சம அளவிலேயே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் இன்னொரு தளம் இங்கே இல்லை.
எஸ்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
அண்மையில் நீங்கள் புனைவுகள் எதையும் எழுதவில்லை. நூற்று முப்பது கதைகளும் மூன்று நாவல்களும் ஓர் ஆண்டில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாசகர்கள் பலர் வேறெதையும் வாசிக்காதபடி உங்களால் அடிக்ட் ஆனவர்கள். அவர்களுக்கு புனைவுகள் இல்லாமல் ஆறுமாதம் கடந்து செல்வதென்பது பெரிய வெறுமை. புனைவுகள் தேவை என்பதை இதுவரை எழுதப்பட்ட எல்லா வரிகளையும் வாசித்தவனாகச் சொல்ல விரும்புகிறேன்.
என்.அருண்