சியமந்தகம் ஒரு மகத்தான தொகுப்பாக வந்துகொண்டிருக்கிறது. ஓர் ஆசிரியரைப் பற்றி நண்பர்கள், வாசகர்கள் என இத்தனைபேர் இத்தனை விரிவாக எழுதிப் பதிவாகும் ஒரு நிகழ்வு இதற்கு முன் தமிழில் நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு உச்சம். எதைச் சொல்வதென்றே தெரியவில்லை. நட்பும் நெருக்கமும் தெரியும் கட்டுரைகளை வாசிக்கையில் இதுவே உச்சம் என்று தோன்றும். ஆழமான ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கையில் இதுவே சிறப்பு என்று தோன்றும். அவ்வகையில் அண்மையில் வாசித்த கட்டுரைகளில் மயிலேறி விசு எழுதிய வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை மிகமிக அற்புதமான கட்டுரை. அவ்வளவு விரிவான வாசிப்பும், வாசித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் மிக விரிவான பார்வையும் கொண்ட அரிய கட்டுரை
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசும் காப்பியங்களும்