ஓர் உடன்தங்கல்

நண்பர்களுக்கு,

வரும் 8- 8.2022 முதல் 13 -8-2022 வரை 6 நாட்கள் அந்தியூருக்கு அருகிலுள்ள எங்கள் மலைத்தங்குமிடத்தில் இருப்பதாகத் திட்டம். விருப்பமுள்ள நண்பர்கள் சிலர் என்னுடன் தங்கலாம். உடன் தங்கல் என்னும் இம்முறை என்றும் எங்கும் கல்வியில் உள்ள ஒன்று. உபநிஷத் என்னும் சொல்லே இதில் இருந்து வந்ததே.

அது ஒதுக்குபுறமான இடம். அங்கே கனமழை இருக்கலாம். சமையல் நாமே செய்யவேண்டும். பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட எல்லாவற்றையும் செய்யவேண்டும்.மின்னஞ்சல், வாட்ஸப் பார்க்கமுடியும் என்றாலும் இணையத்தில் பணியாற்ற முடியாது. குளிர் உண்டு. மிகத் தனிமையான இடம். இலக்கியம், இந்திய தத்துவம், மெய்யியலில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் வரலாம். ஊழ்கத்திற்கான சூழல் அது.

இது வகுப்பு அல்ல, உடன்தங்கல் மட்டுமே. திட்டமிட்ட விவாதங்களோ வகுப்புகளோ இல்லை. எப்போதும்போல இலக்கியம், தத்துவம் சார்ந்த உரையாடல்கள் நிகழும்.

இந்த தங்கலுக்கான செலவுகளுடன் இட வாடகையும் உண்டு. ஆர்வமுள்ளவர்கள் என் மின்னஞ்சலுக்கு எழுதலாம். ஆறுநாட்களுக்கு மொத்தம் 3500 ரூ வரை ஆகலாம்.

இந்தக் கட்டணம் இன்றி இதை நடத்த முடியாது. கட்டணம் கட்ட முடியாத, ஆர்வமுள்ள இளைஞர்களின் கட்டணத்தை நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம். அப்படி எவரேனும் அளித்தால் அத்தகையோரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆகஸ்ட் 14 தமிழ்விக்கி – தூரன் விருதுகள் ஈரோட்டில் வழங்கப்படுகின்றன. 14 முழுநாளும் நிகழ்ச்சிகள். 13 இரவு முதல் தங்குமிடம் அங்கே உண்டு. 13 மாலையில் நான் ஈரோடு வந்துவிடுவேன். இரு நிகழ்ச்சிகளையும் இணைத்துக்கொள்பவர்கள் 14 மாலை ஊர் திரும்பலாம்.

இது ஒரு புதிய எண்ணம். நான் மிகமிக ஆழமான நெஞ்சில் நிறுத்தியிருக்கும் தருணங்கள் இப்படி அமைந்தவை. அதைப்போல சில நிகழலாம் என எண்ணுகிறேன். எப்படி நிகழ்கிறதென்று பார்ப்போம்.

ஜெயமோகன்

[email protected]

முந்தைய கட்டுரைஇந்து என்னும் பெயர்
அடுத்த கட்டுரைநீலி இணைய இதழ்