அமெரிக்கா, கடிதம்

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெக்கு

தங்களின் அமெரிக்க குழந்தைகள் கட்டுரை வாசித்தேன். சாட்டையடி கொடுத்துவிட்டீர்கள். தன் பிள்ளையை தமிழனாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அதற்கு எந்த வித முயற்சியையும் செய்யவில்லை என்பதை பட்டவர்த்தனமாக கூறிவிட்டீர்ர்கள். நான் தங்களை பூன் முகாமில் சந்திக்க வந்தபோது கூட என் மகளின் உயர் நிலைக்கல்வியின் சங்கடங்களை நினைத்துக் கொண்டேதான் இருந்தேன். முகாமில் எனக்கு அவ்வளவாக ஒன்ற முடியவில்லை, ஆனாலும் அங்கிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன். நீங்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த துறையில் பயணிக்க செய்ததைத்தான் எடுத்துக்கொண்டு வந்தேன்

வந்த புதிதில் நான் வேளாண்மை படித்தவள் எனவும் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவள் என்றும் கூறியபோது இந்த கணினி துறை மக்கள் என்னை இயலாமை கொண்டவள் போல் பார்ப்பது போலவும் சிறிது அவமதிப்பது போலவும் தோன்றும். நான் கணினியிலும் தேர்ந்திருந்ததால் அதிலும் வேலை பார்க்கத் தொடங்கினேன்அதன் பின்னும் எனக்கு மகிழ்வு என்பதே இல்லை. என்ன வெறுமை , என் அடையாளம் என்ன என்பதை தேட ஆரம்பித்தேன். அதன் பின்னரே இலக்கிய உலகில் சற்றே அதிக ஆர்வமாய் பயணித்தேன்

உங்கள் கட்டுரையில் உள்ளது போல நான் அமெரிக்காவில் என் பிள்ளைகள் படிக்கட்டும், ஆனால் உயர் பல்கலை கழகத்தில்தான் படிக்க வேண்டும் என்று கிடுக்கி பிடி போடுவதை விட்டு விட்டேன்.அவர்கள் தமிழ் மக்களாக மாற நான் பெரிதும் முயற்சிப்பதில்லை. நான் தமிழ் புத்தகங்களை வாசிக்கிறேன். அது சம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கு பெறுவேன். சிறிது காலம் சென்று அவர்களே தமிழ் என்கிற மொழி சிறந்தது என்றும் அது தனக்கு தெரியாதது ,அதன் பண்பாடு தெரியாதது தனக்கு அவமானமாய்

உணர்கிறார்கள். எனக்கு அதில் பெரிய மகிழ்ச்சியே

தொடர்ந்து தமிழ் பள்ளிக்கு செல்வதாலும் , வீட்டில் தமிழ் பேசுவதாலும் இப்போதெல்லாம் வருபவர்களிடம் இரு மொழிகளிலும் நன்றாக பேசுகிறார்கள். அதில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஆர்வம் கொள்கிறார்கள்.

நீங்கள் சொல்லியிருந்தீர்கள் அல்லவா, என்னை பதின்பருவ பிள்ளைகளுக்கு அடையாளம் தெரியவில்லை என்று. தங்களை புலனத்தில் பார்க்க  வேண்டும் என்று என் பிள்ளைகள் பூன் முகாமில் கேட்டுக்கொண்டேயிருந்ததை நினைத்தேன்.என் பதினெட்டு வருட அமெரிக்க வாழ்வில் நானும் என் குடும்பமும் தமிழனாக, இந்தியனாக இருக்கிரோம் எனபதில்  எனக்கு எந்த வித ஐயமும் இல்லை

மீண்டும் அதை நோக்கித்தான் செல்ல வேண்டும் என்று தட்டிக்கொடுக்கிறீர்கள் என்று உணர்ந்து கொண்டேன்

அப்புறம் பட்டிமன்ற பேச்சாளர்களை மட்டும் குறை சொல்வது எனக்கு பிடிக்க வில்லை. சாலமன் பாப்பையா ஐயா, பாரதி போன்றோர் நடமாடும் நூலகங்கள் என்றே சொல்வேன். வெறும் சிரிக்கவைக்க மட்டுமே அவர்கள் பேசுவதில்லை. அதைத்தாண்டிய சிந்தனையை தூண்டுபவர்கள் என்றே சொல்வேன்.

நன்றி ஜெ

அன்புடன்

மேனகா 

முந்தைய கட்டுரைசடங்குகள் தேவையா?
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது : கமல்ஹாசன் வாழ்த்து