டி.செல்வராஜ் தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியத்தின் முகம். மிகச்சரியான சம்பிரதாய மார்க்ஸியர். அத்தகையவர்களின் மிகப்பெரிய சவாலே அன்றாட அரசியலில் ஈடுபடும்போதே அடிப்படை இலட்சியவாதத்தை இழக்காமலிருப்பது. அது ஒருவகையில் மத நம்பிக்கையைப் பேணிக்கொள்வதுபோல. ‘நான் என் விசுவாசத்தாலே ரட்சிக்கப்பட்டேன். என் விசுவாசத்தை காத்துக்கொண்டேன்’ என்று ஆணையிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். தன் கடைசி உரையொன்றிலும் அதைத்தான் சொல்கிறார்.
தமிழ் விக்கி டி.செல்வராஜ், விசுவாசத்தின் முகம்