சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்கள்

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி

சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன் – தமிழ் விக்கி

தமிழில் இன்றைய தலைமுறையின் முதன்மைப் படைப்பாளி என்பதுடன் இளைய உலகின் காந்திய முகமாகவும் சுனில் கிருஷ்ணன் அறியப்படுகிறார். சுனில் கிருஷ்ணன் தொகுத்தவை, மொழியாக்கம் செய்தவை என காந்திய நூல்கள் பல உள்ளன. அவர் எழுதிய காந்தியக் கட்டுரைகளின் தொகுதிகளும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. தமிழ் காந்திய இலக்கியத்தின் முதன்மைநூல்கள் என சொல்லத்தக்கவை.

குறிப்பாக, இவை எவையும் மரபான காந்தியர்களின் வழக்கமான விதந்தோதல்கள் அல்ல. சுனில் காட்டுவது பாடப்புத்தகக் காந்தி அல்ல. இன்று காந்திமேல் வைக்கப்படும் விமர்சனங்களைக் கடந்து காந்தியை கண்டடைவதற்கான வழி. இன்றைய பின்நவீனத்துவ யுகத்து இளைஞர்களுக்கான காந்தி அவருடைய எழுத்துக்கள் வழியாக திரண்டு வருபவர்.

  • கல்மலர் (காந்திய நெடுங்கட்டுரை)
  • காந்தி எல்லைகளுக்கு அப்பால் ( மொழியாக்க தொகை நூல்)
  • அன்புள்ள புல்புல் (காந்தி கடிதங்கள்)
  • காந்தியைச் சுமப்பவர்கள் (காந்தியக் கதைகள்)
  • ஆயிரம் காந்திகள்
  • நாளைய காந்தி

கதைகளின் ஊடாக காந்தி- காந்தியைச் சுமப்பவர்கள் தொகுதியின் முன்னுரை

முந்தைய கட்டுரைகுடவாயில் பாலசுப்ரமணியம், கோவை புத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரைஒரு விளக்கம் ஒரு பட்டியல்- விஷால் ராஜா