அன்புள்ள ஜெ
கமல்ஹாசனுடன் உங்கள் உரையாடல் சிறப்பாக இருந்தது. உங்கள் நூல் வெளியீட்டை ஒட்டிய பேச்சு என்றாலும் அது பல இடங்களைத் தொட்டுச் சென்றது. வெவ்வேறு ஆசிரியர்களும் சினிமாக்களும் வந்துகொண்டே இருந்தன.
என்ன ஆச்சரியமென்றால் நான் கசாக்கின்றே இதிகாசம் ஓர் அற்புதமான சினிமாவாக ஆகும் என நினைத்திருந்தேன். ஆனால் கசாக்கின்றே இதிகாசத்துக்கு பிறகு இலக்கியமும் சினிமாவும் இரண்டு வழிகளாக பிரிந்துவிட்டன என்ற வரி என்னை குழப்பியது.
ஆனால் யோசிக்கும்போது அது சரி என்றே தோன்றுகிறது. கசாக்கின்றே இதிகாசம் விஷுவலான படைப்பு. ஆனால் அதெல்லாமே படிமங்கள்தான். அந்த இடத்தை ரியலாக உருவாக்க முடியாது. உருவாக்கினாலும் அந்த குறியீட்டுத்தன்மை போய்விடும். விஜயன் ஒரு லிரிக்கலான மொழி வழியாகத்தான் அந்த நாவலை உருவாக்குகிறார்.
கமல் ஸ்பார்ட்டகஸ் பற்றிச் சொன்னதும் ஆச்சரியம். அது குப்ரிக்கின் நல்ல படம் அல்ல. ஆனால் நல்ல திரைக்கதை.
சச்சின் ராஜமாணிக்கம்
அன்புள்ள ஜெ
கமல்ஹாசனும் நீங்களும் உரையாடியது ஒரு நல்ல கட்டுரையாக இருந்தது. அதன் வீடியோ அப்லோட் ஆகுமா? அதை எவரேனும் மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்
ராஜ்