கோவையில் நான்…

 குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் விக்கி

குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலசுப்ரமணியன் – தமிழ் விக்கி

கோவையில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. 22 ஜூலை முதல் தொடங்கும் இவ்விழா கோவை மாவட்டச் சிறுதொழில்கள் சங்கம் (கொடீஷியா) அரங்கில் நடைபெறுகிறது.

இவ்வாண்டுக்கான கொடீஷியா விருது வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இளம்படைப்பாளிக்கான விருது சுரேஷ் பிரதீப்புக்கு வழங்கப்படுகிறது

23- ஜூலை-2022 அன்று நிகழும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் நான் பேசுகிறேன்.
விழா நாள் 23-7-2022

பொழுது மாலை 6 மணி

இடம் கொடீஷியா வணிக வளாகம் கோவை


கொடீஷியா விருது பெறும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தமிழின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முதன்மையான சிலரில் ஒருவர். தீவிரமான கதைக்கருக்களும், அகவயப்பார்வையும் கொண்ட படைப்புகளை எழுதுபவர். சுரேஷ் பிரதீப்புக்கு வாழ்த்துக்கள்

சுரேஷ் பிரதீப் தமிழ் விக்கி

சுரேஷ் பிரதீப்
சுரேஷ் பிரதீப் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைStories of the True -கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்