கீதை பக்கம்

அன்புள்ள ஜெ,
கீதையை பயில வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறேன். உங்களுடைய பதிவுகள்,  வாசகர் கடிதங்கள்,  கீதை பேருரை, கீதை உரை குறித்து மரபின் மைந்தன் முத்தையாவின் அறிமுக இடுகைகள், நித்யாவின் ஆங்கில உரை ஆகியவற்றை படித்து கேட்டு தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரே பக்கத்தில் தொகுத்தால் என்ன என்று ஆரம்பித்து தொகுத்துள்ளேன்.
இந்த வரிசை மற்றும் பிரிவு முறையில் ஏதேனும் மாற்றங்கள், வேறு பதிவுகள் அல்லது இணைப்புகளை சேர்க்க உங்களுடைய கருத்துக்களை தெரிவித்தால், மேம்படுத்த உதவியாக இருக்கும்.
கீதை தொகுப்பு பக்கம் – https://www.jeyamohan.in/கீதை/ 
 
இதைப்போல் வேறு தொகுப்புகள் பற்றிய யோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும்.
 
திரு[அண்ணாமலை]
அன்புள்ள திரு
சிறப்பாக இருக்கிறது
இதேபோல திருக்குறள். வேதாந்தம்(அத்வைதம்) ஆகியவற்றுக்கும் செய்யலாம்
ஜெ
முந்தைய கட்டுரைசோழர்களும் பிராமணர்களும்
அடுத்த கட்டுரைகென்ய தேர்தல், ஜனநாயகம்- வெங்கடேஷ் சீனிவாசகம்