புனிதபலிகள்- கடிதம்

அன்புள்ள ஜெ,

இந்தமுறை கிராமத்துக்குச் சென்றிருந்தபோதுவிவசாயம் செய்யும் அண்ணன் ஒருவர் மேல்நிலைக் கல்விவரை முடித்திருக்கும் தனது மகனுக்கு எங்காவது ஒரு வேலை இருந்தால் சொல்லுமாறு கேட்டார். அவருக்கு தென்னைமா போன்ற தோப்பு உட்பட ஏறக்குறைய முப்பது ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. ஒருமுறை பசுமை விகடனில் குதிரைவாலி சாகுபடிக்காக அவர் பேட்டி படத்துடன் வந்திருக்கிறது

உலகிலேயே பணக்கார நாடான கத்தாரில்விவசாய ஆர்வமும் தகுதியும் உள்ள ஒருவருக்குநிலம்அடிப்படை முதலீடுநீர்நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை அரசாங்கமே அளித்துகாலநிலை இயைந்துவரும் வருடத்தின் ஆறு மாதங்கள் விவசாய பொருட்கள் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்றாலும் அவரும் பணரீதியில் பெரிய லாபம் கிடைக்காமல் அதில் கிடைக்கும் மன நிறைவுக்காகவே செயல்படுவதாகச் சொல்கிறார்

தஞ்சாவூர்மதுரை போன்ற விவசாயம் சார்ந்த நிலங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இங்கு (மத்திய கிழக்கு நாடுகளில்) அடிப்படை வேலைகளில் பணிபுரிகிறார்கள். பேசினால்தற்போது செய்யும் வேலையின் கடுமைபிரிந்திருக்கும் குடும்பம்ஊரில் இருந்த/இருக்கும் விவசாய நிலங்களில் அவர்கள் இங்கிருந்து சென்றவுடன் செய்யப்போகும் விவசாய கனவுகள் போன்றவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால்இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஒருமாத விடுமுறையில் ஊருக்குச் சென்றவுடன் அவர்கள் முகத்தில் நிதர்சனம் வந்து அறையும்

நாணிலிருந்து விடுபட்ட அம்புபோல வந்து விழுவார்கள்இப்பொது செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிடுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.ஏன், விவசாயத்தை லாபமாக செய்யவே முடியாதா?.   

ஒரு சிறு விவசாயி (5 ஏக்கர் வரை) எல்லா சூழலும்இயற்கையும் சரியாக அமைந்து மூன்று போகத்தில் விளைவித்து எடுக்கும் வருமானத்தை, Organized Sector” என்று சொல்லப்படும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒருவருக்கு ஒரு சில மாத சம்பளத்தில் கிடைத்துவிடும் வாய்பிருக்கிறது. (என் கிராமத்தின் நிலையை வைத்துப் பொதுமைப் படுத்திக் கொள்கிறேன்). 

எனவே தொழில்மயம் ஊக்குவிக்கப்படும் இன்றைய சூழலில் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி சிறு நகரங்களிலும்பெரு நகர எல்லைப்பகுதியில் குடியேறுகிறார்கள். ஒரு வகையில் தொழில்மயமாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த இடப்பெயர்வு கருதப்படுகிறது.  

ஒரு கருதுகோளுக்காகமுன்பு 90 சதவீதமாக இருந்த விவசாயிகள் இப்போது 50 சதவீத அளவாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்அப்படியெனில் 100 உறுப்பினர்களுக்குமுன்பு 90 பேர் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது 50 பேர் மட்டுமே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்மேலோட்டமாக இது நல்லதுதானேஅப்போது இருந்தால்தான் நல்ல லாபம் கிடைக்கும் என்று தோன்றுகிறது என்றாலும் இங்கு கொஞ்சம் சிக்கல் இருக்கிறது

*****

விவசாயம் செய்யும் மனிதர்கள் குறைந்திருக்கிறார்கள்அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது என்றாலும்அறிவியல் முன்னேற்றம்எளிதான கருவிகள்திறமையான மேலாண்மை போன்றவற்றைக் கொண்டு உற்பத்தியின் அளவை பலமடங்கு பெருக்கி விவசாயத்திலிருந்து வெளியேறி தொழிற்சாலைக்குச் செல்லும் மக்களுக்கும் சேர்த்துஇன்றைய விவசாயி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்திட முடிகிறது.உற்பத்தித் திறன் மற்றும் அளவு உயர்ந்திருக்கிறது. ஏன் லாபம் பெற முடியவில்லை?.

ஏனென்றால் அவன்அவனுடைய உற்பத்திப் பொருட்களை அந்த சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மனிதனுக்கு எட்டும் நிலையிலேயே விற்றாக வேண்டும் என்ற நேரடியான மற்றும் மறைமுகமான நிர்பந்தத்தில் இருக்கிறான்.விவசாயியின் தலைக்கு மேல் இந்த வலை கண்ணுக்குத் தெரியாமல் விரிந்திருக்கிறது எவ்வளவுதான் அதிகமாக உற்பத்தி செய்தாலும், அல்லது அந்த விவசாயப் பொருள் குறைவாக உற்பத்தியாகி தேவை அதிகரித்தாலும் அவனால் அதிக பணம் லாபமாக ஈட்டிட இயலாது

விவசாயத்தை ஊக்குவிக்கும், பணக்கார நாடான கத்தாரில் விவசாயம் செய்தாலும் அந்த விவசாயி கடைநிலை ஆப்பிரிக்கவங்க ஊழியர்களின் வாங்கும் திறனிலேயே விலை நிர்ணயம் செய்யவேண்டும்.உலகம் முழுவதிலும் இப்படித்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது

இந்தியாவில் சில வெற்றிகரமான விவசாயிகள் தங்கள் தனித் தொடர்புகள் மூலமாகவும்சமூக வலைத்தள தொடர்புகள் மூலமாகவும் கீழ் நிலையில் இருக்கும் நுகர்வோர்களைத் தவிர்த்து மேல் நிலையில் இருக்கும் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் லாபம் அடைகிறார்கள். அப்படித்தான் லாபம் அடைய முடியும். அப்படியெனில் இந்த சமூகத்தில் உணவூட்டும்  ஒரு பிரிவினரை அதிக அழுத்தத்தில் வைத்துவிட்டுஅதன்மேல் மற்ற பிரிவினர் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது.  

இது போன்ற இடங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒரு சூத்திரம் இருக்கிறது.  புனிதப்படுத்திவிடுவது”.  இன்றைய திரைப்படங்கள்சமூக வலைத்தளங்கள்அரசியல் அமைப்புகள் எங்கும் ஒரு விவசாயி புனிதனாக்கப்படும் சூழலைக் கவனிக்கலாம். ஒரு வகையில் இலவச மின்சாரம்குறைந்தவிலை உரங்கள்மானியம் போன்றவையும் கூட அவ்வாறானவையே. அந்தப் புனிதமாக்கல் அவனையும் அவன் சார்ந்த மனிதர்களையும் அந்த இடத்திலேயே நிலைநிறுத்தி வைக்க உதவும்

அமெரிக்காஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இத்தகைய புனிதமயமாக்கல் நடந்துகொண்டுதான் இருக்கிறதுஇவையெல்லாம் தேவையா என்றால்உலகெங்கிலும் இப்படி விவசாயத்தைப் புனிதமாக்கப்படாத அல்லது புனிதமாக்கப்பட முடியாத நாடுகளில் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அழிந்துவருவதாகத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டு பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை போன்ற அருகில் இருக்கும் நாடுகள்.   

(விவசாயத்தை ஒரு தொழிலாக மட்டும் பார்த்தால் அதைவிட லாபமான தொழில் இருக்கிறதுதானே?). இன்றைய போர்ச்சூழலில்உலகெங்கும் பணவீக்கம் ஏற்பட்டு உணவுப் பொருட்கள்வாழ்வியல் தேவைகள்சேவைகள் ஆகியவற்றின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துநடுத்தர வர்க்கம் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தொழில் யுகத்தின்உலகமயமாக்கலின்விழுமியங்களில் ஒன்றாக இதைக் கருதலாம் என்பதால்பலனடைந்தவர்கள்துன்பமடைவது இயல்புதான் என்று சமாதானம் செய்துகொள்ளலாம். இதற்காக அவர்கள் வேறொரு தருணத்தில் ஈடு செய்யப்படவும் கூடும்

ஆனால் முந்தய யுகத்தின் பிரதிநிதியாகஇதற்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாது தன் குறுகிய விளைநிலத்துக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் விவசாயின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் அடிப்படைக் கல்விமருத்துவம்உடைபோன்றவைகூட இதன்காரணமாக அவன் எட்டமுடியாத உயரத்தை அடைந்துவிடும்.  

அந்த நிலையிலும்தொழில்யுகத்தில் வெளித்தள்ளப்பட்ட அந்த தொழிலாளிக்கும் விவசாயியே உணவிடவேண்டியிருக்கும். நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அந்த பொறுப்பும் அழுத்தமும் அதிகரித்தபடியே இருக்கும்அரசாங்கமும் தொழில் சார்ந்தே இருப்பதால், அன்று அரசும் ஏழ்மையுற்று விவசாயிக்கு/விவசாயத்திற்கு கொடுப்பதற்கு எதுவும் இருக்காது.அப்போது அவன் மேலும் அதிகமாகப் புனிதப்படுத்தப் படுவான்.  

(முன்பும் ஒரு இனம் இதுபோலவே புனிதப்படுத்தப்பட்டுஇன்று உடைத்துக் கொப்பளித்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.  அவர்கள்நம் வீட்டுப் பெண்கள்“). 

அப்படியெனில் விவசாயிகள் இந்த சுழலில் இருந்து வெளியேறினால் யார்தான் உணவு உற்பத்தி செய்வதுஎப்படித்தான் வாழ்வது என்று கேள்வி எழுகிறது.சரிதான். அதை நாம் எல்லோரும் கேட்டுக்கொள்ளலாம்அதைப்பற்றி ஒரு விவசாயி கவலைப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது

அன்புடன்

சி. பழனிவேல் ராஜா

***

முந்தைய கட்டுரைபுனைவுகள் தேவை- கடிதம்
அடுத்த கட்டுரைஅப்பால் உள்ளவை, சுரேஷ் பிரதீப்