தங்களது இந்த காணொளி இன்று முதல்முறையாக பார்த்தேன். சிறப்பாக இருந்தது.
அதில் தாங்கள் கூறி உள்ளீர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக கடந்த ஒரு விபத்தை பின் ஒரு சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த ரூபாய் நோட்டின் டினாபினேஷன் கூட ஞாபகத்தில் விரிகிறது என்று பகிர்ந்துள்ளீர்கள்.
இங்கு திண்டுக்கல்லில் ஒரு நண்பர் உள்ளார் தங்களது வெண்முரசு படைப்பின் கதாபாத்திரத்தின் தொடர்புடையநபராக உள்ளது ஒரு தற்செயலான நிகழ்வு பொருத்தமாக உள்ளது.
இவர் தனது சிறு வயதிலேயே தனக்கு ரீ-இன்கார்நேஷன் எதார்த்த புரிதலோடு அனிச்சையாக ஏற்பட்டதாக உணர்கிறார்.
அந்த சாதாரண மானுட கண்ணன் மீண்டும் பிறந்து தற்போது ஒரு எளிய வாழ்வில் நகர்ந்து கொண்டு இருப்பதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை என்பது இவரது இயல்பாக உள்ளது.
இருப்பினும் எப்போதாவது எவரோ ஒருவர் பல வருடம் எதோ ஒரு ஆத்ம சாதனை பயின்று அதனையே வாழ்வியலாக உள்ளவர் இவரை அடையாளம் கண்டு கொண்ட நிகழ்வும் அனிச்சையாக நடந்துள்ளது.
பயணங்களில் விருப்பம் கொண்ட தாங்கள் எப்போதாவது திண்டுக்கல் ஊரை கடந்து சென்றால் இவரையும் தங்களது பயணத்தில் சந்தித்து கை குலுக்கி கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்.
நன்றி
அசோக்
திண்டுக்கல்.