புயலிலே ஒரு தோணி, சினிமாவாக?
மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் உங்கள் “புயலிலே ஒரு தோணி, சினிமாவாக?” மற்றும் “பக்தி” ஆகிய பதிவுகள் வாசிக்கும்போது, இது நினைவுக்கு வந்தது. ப.சிங்காரம் அவர்கள் கடலுக்கு அப்பால் நாவலில் ஆன்மிகம் என்றால் என்ன என்று போகிறபோக்கில் ஒரு வரியில் சொல்லிச்சென்றிருப்பார்.
“பக்தி, தத்துவம், சேவை போன்ற ஆன்மிகமான விஷயங்களில் …” என்ற வரி வரும்.
ஆன்மிகம் என்பதற்கு இதுவே துல்லியமான ஒற்றைவரி விளக்கமாகத் தோன்றியது.
அன்புடன்,
வி. நாராயணசாமி
அன்புள்ள ஜெ
ப.சிங்காரம் நாவல்களை சினிமாவாக ஆக்குவது பற்றிய கட்டுரை மிகத்தெளிவானது. ப. சிங்காரம் பற்றிய ஒரு நல்ல மதிப்பீடாகவும் அது அமைகிறது. நான் அவர் நாவல்களைப் பற்றி கொண்டுள்ளதும் அதே கருத்துதான். புயலிலே ஒரு தோணி முதன்மையாக ஓர் அங்கதநாவல். அதை ப.சிங்காரம் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை.
ப.சிங்காரம் பற்றிய விக்கி பக்கமும் அருமையானது. நன்றி
சண்முகம் மயிலப்பன்.
ப.சிங்காரம்