பெண் எழுத்தாளர்கள், கடிதங்கள்

குமுதினி

எம்.எஸ்.கமலா

குமுதினி  நான் அறிந்திராத எழுத்தாளர். நல்ல தொகுப்பு. நல்ல கதை அல்லது கட்டுரை போல் சுவாரசியமாக இருந்தது. இவர்கள் எழுத்தை மேலும் படிக்க தூண்டுகிறது.

இதில் கண்ணுக்கு தெரியாத ஒன்று.. பல தரப்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து தொகுத்தது. இவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.

தமிழ் விக்கியில் பல தொகுப்புகள் அரியனவாகவும், படிப்பதற்கு எளிமையாகவும் உள்ளன. மலேசிய எழுத்தாளர்கள் பற்றியும் ம.நவீன் செய்யும் மறுபதிவில் அறிந்து கொள்கிறேன்.

தமிழில் இயங்கி கொண்டு இருந்த பாடப் பெறாத நாயக நாயகிகளை பற்றி வியப்படைகிறேன். அதிகம் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். மனதில் ஒரு தளத்தில் எழுதவும் தூண்டுகிறது.

குழுவினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

அன்புடன் முரளி

***

அன்புள்ள ஜெ,

குமிதினி அவர்களின் ஆளுமை பிரமிப்பு அளித்தது, எனக்கு விக்கி பக்கம் என்பது விதி சமைத்தவர்களின் பட்டியல் என்று தோன்றியது !

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

குமுதினி, வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்ற சாதனையாளர்கள் மறக்கப்பட்டமைக்கு அவர்கள் பெண் என்பதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். தமிழ் விக்கி வழியாக தொடர்ச்சியாக அவர்கள் வரலாற்றில் நிறுத்தப்படுகிறார்கள். நன்றி

இரா. அமுதச்செல்வி

முந்தைய கட்டுரைகபிலர் குன்று, கடிதம்
அடுத்த கட்டுரைகாடையூர் வெள்ளையம்மாள்