கொங்கு அறிஞர்கள்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி பக்கங்களில் கொங்கு வட்டார அறிஞர்கள் பலருடைய குறிப்புகளைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.தி. அ. முத்துசாமிக் கோனார், டி.எம்.காளியப்பா, வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், தெய்வசிகாமணிப் புலவர் போன்றவர்கள் பற்றிய பதிவுகள் கண்டேன்.

செ.இராசு அவர்களைப் பற்றிய பதிவும் உடனடியாக வரும் என நினைக்கிறேன்.

செந்தில்

***

அன்புள்ள செந்தில்

ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் ஒரு முழுமையான சித்திரம் அமையலாம். ஆனால் இது முடிவே இல்லாத பணி. அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னெடுத்துக் கொண்டுசெல்லவேண்டியது.

செ.ராசு பற்றிய பதிவு முழுமையடையும் நிலையில் உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைStories of the True- ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைStories of the True – கடிதங்கள்