சி.என் டவர். ஒரு பிரம்மாண்டமான கான்கிரீட் தூண். மானுட முயற்சியின் சின்னம். மானுட முயற்சி சிலசமயம் வெற்று அகங்காரமாகவும் ஆகலாம்
காசா லோமா கோட்டைவீட்டின் தோட்டத்தில். ஒரு மத்தியகால பாகன் சிற்பம். ஒருவகை யாளி போலும்
குடிநீர் ஏரி. ஒண்டோரியோ ஏரியின் குளிர் நீரில் அதிகபட்சம் இரண்டு நிமிடம் நிற்க முடியும். நரம்புகள் உறையும் வரை…
டல்ஹௌசி என்ற சின்ன கிராமம். நமது டல்ஹௌசி பிரபுவின் முன்னோர்களின் ஊரில் இருந்து வந்த பெயர்தான்
திரைப்பட விழாவில் விருது வழங்குகிறேன். அருகே டாம் சிவதாசன் -தவிட்டுநிற கோட்டுடன்
உரையாற்றுகிறேன். நல்லவேளை பதற்றம் முகத்தில் தெரியவில்லை
’சேயுடனான உறவு பற்றிய அந்தக்கவிதைகளிலே பாத்தீங்கன்னா’ -சேரனுடன் ஒரு உரையாடல்
ஆயிரம் தீவுகள். உண்மையாகவே ஆயிரம்… ஐந்தாயிரம் கோடைவாசவீடுகள் என்றும் சொல்லலாம்
அருங்காட்சியகம் வாசலில். முக்கோணங்களாலான ஒரு பிரம்மாண்டமான பின் நவீனத்துவ பாணி கட்டிட முகப்பு. முக்கோணமாகையால் பெரும்பகுதி இடம் வீணாக கிடக்கும் அமைப்பு கொண்டது. பின் நவீனத்துவத்தில் அப்படி கொஞ்சம் வீணாக கிடந்தாகவேண்டுமோ என்னவோ
சீன துவாரபாலகர். காவலர் என்றாலே மிரட்டியாகவேண்டுமே
சீன போதிசத்வர். பொதுவாக சீன போதிசத்வர்கள் தத்துவச்சிக்கல் ஏதும் தெரியாமல் ஹாய் ஆக இருக்கிறார்கள்.
குலக்குறி மரம். அதில் உள்ள முகங்களுக்கெல்லாம் பல அர்த்தங்கள். நம்மூர் காவல் மாடசாமிகளின் ஒரு பெருந்தொகை.
சேரனின் நாய் லாஸா. திபெத்திய வகை. கோடைக்காக சம்மர் கட் அடித்திருப்பதனால் குட்டியாக தெரிகிறார். வயது 12 . அதாவது முதுமைப்பிராயம். ஆனால் பொதுவாக லாமாக்களுக்கு வயது தெரிவதில்லை
பிரம்மாண்டமான அடிமரம். பலநூறு வருட தவம் அளித்த வைரம்
கல்வெட்டுச்சிற்பம், டொரொன்டோ கலையரங்கத்த்து வாசலில்
‘பனிவயல் உழவு’ கவிஞர் திருமாவளவன்ுடன்
படங்கள்