அன்புள்ள ஜெ,
ஒண்டேரியோ அருங்காட்சிய பதிவு எனது சில அருங்காட்சிய அக அனுபவங்களை மீண்டும் நினைவில் கொண்டுவரச்செய்தது. ஆம். அருங்க்காட்சியப் பொருட்கள் நினைவில் தங்குவதே இல்லை. ஆனால் அது அளிக்கும் அக அனுபவம் மிக முக்கியமானது. அவை விதைகள். எப்போதாவது முளைக்கும்.
தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் முகலாயர் கால கம்பளமும் தலை திண்டுகளும் கண்டபோதே மிக அழகிய அக அனுபவத்தை அளித்தது. ராஜாதி ராஜ ராஜ கம்பீர என்ற காலம். அனால் இந்த காட்சியில் காலம் மிக மிக மெதுவாக ஓடியது. மன்னர் ஒய்யாரமாக படுத்திருக்கிறார். குட்கா புகை கண்ணசைத்தல் வர பணிப்பெண்கள் உண்டு. ராயல்டி என்ற சொல்லிற்கு அர்த்தம் கண்ட அக அனுபவம். அறிவும் கற்பனைத்திறனும் உணர்ச்சியும் சரியாக கலந்த அனுபவமோ.
ஹரப்பா நாகரிகத்தை அறிவதற்காக சண்டிகர் பஞ்சாபில் உள்ள அருங்காட்சியங்களில் சுற்றி கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் ஹரப்பா தெருவில் தனக்குள் எதோ மெல்லியதாக பாடிக்கொண்டு சில்லு போல எதையோ பின்புறம் தூக்கி எறிந்து தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கண்டேன்.
மதுரா அருங்காட்சியகத்திற்கு ‘காலி மண்ணு சட்டியவே பாத்துகிட்டு இருந்திய்ன மத்தியானம் சோறு கெடக்காதுடி’ ‘museum is just waste of time. you know’ என்ற பெரும்பான்மையுடன் சென்றதால் ஒன்றும் நினைவில் வரவில்லை. ஆனால் பலப் பொருட்கள் நீங்கள் சொல்வது போல அகம் பதிவு செய்திருக்கும். ஆனால் தலையில்லாத மன்னர் வந்து அவ்வப்போது பயமுறுத்துவார். அவர் யார். நம்ம அனுஷ்கவா. எந்த படம். பார்த்த ஞாபகம் இல்லை.
ஹிமாச்சல் பிரதேசம் சிர்மூர் மாவட்டம் suketi fossil park கவனிப்பாரற்று இருந்தது. அங்கே பல லட்ச வருட முந்தய ஃபாசில்கலும் சிவாலிக் பகுதியில் வாழ்ந்த மிருகங்களின் ((Stegodonganesa (extinct grand elephant) Sivatherium, Hexaprotodon-Sivalensis (hippopotamus with six incisors), Colosschelys Atlas (giant land tortoise and chelonia), Paramachaerdus (Sabre Toothed tiger) and Crocodilia )) லைப்-சைஸ் மாடல்களும் இருந்தன. அந்த மாடல்களை புதர்களின் நடுவில் காட்டில் ஆங்காங்கே நடைதூரத்தில் அமைத்திருகிறார்கள். அதை தேடி கண்டுபிடித்து பார்த்து திகிலாவது நல்ல அனுபவம். அந்த யானை கணேசனுக்கு எல்லாம் கணேசன். நமது ஊரில் இவரை சிலை செய்து வழிபட்டால் இன்னும் கலை அழகும் பக்தியும் ஞானமும் பெருககூடும்.
அருங்காட்சியம் அளிக்கும் கால உணர்வும் சித்திரமும் மிக அற்புதமானது.
மேலும் மேலும் நீங்கள் அருங்காட்சியகங்களை தவறாமல் பார்க்க கடவுவதாக. ஓம் தத் சத்.
அன்புடன்,
ராஜா.