தொல்காப்பியம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ரெங்கராஜன். தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு சந்தேகம், அபத்தமாகவும் இருக்கலாம்.
தொல்காப்பியம் படித்த போது ஒட்டகத்தைப் பற்றிய குறிப்பைக் கண்டேன். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் ஒட்டகம் இருக்கும் அளவிற்குப் பாலைவனம் இல்லை, இருந்திருப்பதாகவும் அறியவில்லை. அப்படியானால், ஒன்று ஒட்டகம் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். அல்லது அரபு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்க வேண்டும்.

அரபு மற்றும் ரோம நாட்டினருடன் வணிகம் கிபி 100 – 300 செழித்திருந்ததாகப் படித்திருக்கின்றேன். அப்படியானால் தொல்காப்பியம் கிபி 100 போல் எழுதப்பட்டதா ?

சங்க இலக்கியங்களில் ஒட்டகம் பற்றிய செய்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. புறநானூற்றில் நான் படித்த வரை ஒட்டகம் பற்றிச் சொல்லியிருப்பதாக நினைவில்லை. புறத்திற்குப் பிறகு தொல்காப்பியம் எழுதப்பட்டதா ? தொல்காப்பியத்தின் காலம் என்ன ?

நன்றி.

ரங்கராஜன்

அன்புள்ள ரங்கராஜன்

தொல்காப்பியத்தின் காலகட்டத்தைப் பின்னுக்குத்தள்ளியவர்கள் தமிழிய இயக்கத்தவர். அது உணர்ச்சிகர நம்பிக்கை மட்டுமே. வையாபுரிப்பிள்ளை மரபைச் சேர்ந்தவர்கள் தொல்காப்பியம் பிற்காலப்பிரதி என்றே நினைக்கிறார்கள்.வேதசகாயகுமார் எழுதியிருக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை பாடல்கள் மிகவும் தொன்மையானவை. அவை தொல்காப்பிய இலக்கணத்துக்குள் பின்னர் அடக்கப்பட்டவைதான். தொல்காப்பியம் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டகாலகட்டத்தில் உருவானது. அதாவது கிபி இரண்டு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற தொல்தமிழிலக்கியங்களைவிட அதிகமான சம்ஸ்கிருதக் கலப்பும் சம்ஸ்கிருத இலக்கணப்பாதிப்பும் கொண்டது

ஜெ

 


சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும், 2

சங்க காலமும் இந்திய சிந்தனைமரபும் 1

 

 

 

 

முந்தைய கட்டுரைஆயிரம் தீவுகள்
அடுத்த கட்டுரைகுலக்கல்வி,கலைகள்-கடிதம்