மு.இராகவையங்காரும் ஆர்.ராகவையங்காரும்

கலாச்சாரம் என்பதே மானுட இயற்கைக்கு எதிராகச் செயல்படுதல் என்று சொல்லலாம். மானுடவிலங்கு காமமும் பசியும் வன்முறையுமாக அன்றாடத்தில் வாழ்ந்து அழிவது. உள்ளுணர்வு மட்டுமே அதன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. கலாச்சாரம் என்பது நேர் எதிரானது. காமத்தை வன்முறையை கட்டுப்படுத்தி, பசியை ஆட்சிசெய்தாலொழிய பண்பாடு இல்லை. கூடவே அன்றாடத்தில் மட்டுமே திளைக்கும் உள்ளத்தை இழுத்து விரித்து கடந்தகால நினைவுகளாக, எதிர்காலக் கனவுகளாக ஆக்கவேண்டும்.

சென்ற கால அறிஞர் ஒருவரை பற்றிப் பேசினால் உடனே “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன?” என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் எவராக இருந்தாலும் கலாச்சாரத்துக்கு எதிரான எளிமையான மானுடவிலங்கு மட்டும்தான். இன்னொரு சொல்லில் பாமரர். அவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். அதைச் சொன்னால் வருந்துவார்களென்றாலும் அதுவே உண்மை. அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் அறிஞர்களை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். அப்படியெனில் மட்டுமே நாளை  அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். அந்த உறுதிப்பாடே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை

நினைவுகூர்ந்தே ஆகவேண்டிய ஆளுமைகளில் ஒருவர் மு.ராகவையங்கார்

 மு.இராகவையங்கார்

மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார் – தமிழ் விக்கி

அவருடன் எப்போதுமே குழப்பிக்கொள்ளப்படுபவர் ரா.ராகவையங்கார். இருவரும் உறவினர்கள். ஒரே களத்தில் பணியாற்றியவர்கள்

ரா.ராகவையங்கார்

ரா.ராகவையங்கார்
ரா.ராகவையங்கார் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, இளைஞர்கள்-கடிதம்
அடுத்த கட்டுரைபுயலிலே ஒரு தோணி, சினிமாவாக?