அன்புள்ள ஜெயமோகன்,
‘யானை டாக்டர்‘ கதை, டாக்டரை அறிந்து நேரில் பழகிய நண்பர்கள் ஜெயராமையும், பெருமாள் சாரையும் (T.N.A.Perumal) நெகிழ்வடையச் செய்துவிட்டது. தன்னமலற்ற சேவை புரிந்த டாக்டரை வெளியுலகுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள கதை. பெருமாள் சார், அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்.
அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விவரங்கள்:
- ஐ.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) என்றழைக்கப்பட்ட யானை பற்றி டாகடர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். யானைகள் முகாமில் சிகிச்சைக்கு வராமல் அடம் பிடிக்கும் யானைகளைக் கட்டுப்படுத்தி ஒத்துழைக்க வைப்பதில் டாகடருக்கு எப்போதும் உதவியது இந்த ஐ ஜி தான்.
- National Geographic Society யிலிருந்து ஒரு குழு முதுமலை யானைகள் முகாமுக்கு வந்து டாக்டருடன் சில நாட்கள் தங்கி ஆவணப்படம் ஒன்று எடுத்தனர்.
- காட்டு நாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. அருகில் வராது. மனிதரிடம் பழகாது. (என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் எழுதியிருப்பது உண்மைகளுடன் கலந்த அழகான புனைவு (fiction). இம்மாதிரியான விஷயங்களை உணர்ச்சிகலந்த கற்பனையுடன் விவரித்திருப்பது சிறப்பாக இருக்கிறது.)
ஜூன் மாதம் 30 ஆம் தேதி எம்.கிருஷ்ணன் நினைவுச் சொற்பொழிவும், யானை டாக்டர் கிருஷ்னமூர்த்திக்கு நினைவுகூரலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்புடன்
ஆனந்த் சிகாமணி
அன்புள்ள ஆனந்த் சிகாமணி,
மிகச்சிறந்த விஷயம். ஒரு மாமனிதரை அவரது காலம் கடந்தாவது நாம் அங்கீகரிக்கிறோம். அவரை நினைவுகூர்வதும் போற்றுவதும் அவர் வாழ்க்கையாகக் கொண்ட விழுமியங்களைப் போற்றுவதேதான்.
அன்று நான் கலந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பேன் , பயணம் முடிந்து அப்போதுதான் திரும்பிவருவேன் என நினைக்கிறேன்.
ஜெ
அழைப்பிதழ்
காட்டியல் கண்காட்சியும் விழாவும்
இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி, பீளமேடு, கோவை
நாள் -29,30 ஜூன் 2011
நிகழ்ச்சி
29-6-2011
காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி
மா கிருஷ்ணன், டி என் ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்
30-6-2011
மாலை 5.00
யானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு
ஆற்றுபவர் ; காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன் [முதுமலை காட்டியல் பூங்கா]
மாலை 600
மா கிருஷ்ணன் நினைவுச்சொற்பொழிவு
ஆற்றுபவர் ; டி என் ஏ பெருமாள்
யானை டாக்டர் ஆங்கில மொழிபெயர்ப்பு