தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
உங்கள் பெயரில் அமைந்த முகநூல் பக்கத்தில் வந்த விவாதம் இது.
இன்று இந்த குரல் இப்படி ஓங்கியிருக்கிறதே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்
என்.சங்கர்
*..
நீறில்லா நெற்றி பாழ்… என்று சொன்ன அவ்வையாரை ஏன் இப்படி செய்து வைத்து இருக்கிறீர்கள்? வள்ளுவருக்கும் அதே…
70 வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களில் திருவள்ளுவர் திருநீறும், ருத்ராட்ச மாலையுமாக இருப்பார்… இப்போது?… வள்ளலாரையே பாழ்நெற்றியனாக்கியவர்கள் தானே இவர்கள்… இதை எல்லாம் சொன்னால் இவர்கள் நம்மை மனமுதிர்ச்சி அற்றவர்களாக சித்தரிப்பார்கள்.
தமிழ் – வாழ்வியல் மொழி என்பதால் இனம் மதம் நிலம் என்ற சிறு வட்டம் அல்லது எல்லைகளை கடந்த ஏகாந்த நிலை. ஆதலால் ஆசிரியர் திருநீறை மறைத்திறுக்க வாய்ப்பு அதிகம்
Ashok Kumar சரி, உங்களை போன்றவர்கள் தான் நம் எல்லா பாரம்பரிய, வாழ்வியல் முறைகள், அறிவியல் சேர்ந்த கலாச்சாரம், சிறந்த மருத்துவம், உலகிலேயே சிறந்த தமிழர் நாகரீகம், மொழி, உணவியல், விளையாட்டுக்கள், பண்டிகைகள், தேச பற்று போன்றவை அழிந்து 47000 பேர் தாய்மொழி தேர்வில் கூட தேர முடியாமல் தமிழர்கள் ஆனதற்கு உண்மையான காரணம்…
இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்த, இன்னும் இருப்பவற்றையும் அழிக்கும் வழிமுறைகளில் முதல் படிதான் இந்த அடையாள அழிப்பு… உங்கள் அடையாளம் தெரிந்தால் உங்கள் வரலாறை தெரிந்து கொண்டு விடுவீர்கள்… இதற்கு மதம் ஜாதி என்று திசை திருப்புவார்கள்… மூட நம்பிக்கை என்று நம்ப வைப்பார்கள்…
இவற்றை புரிந்து கொள்ளாமல் இவர்களுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்… வருத்தம்…
நல்ல உருட்டு… இனம் மதம் எல்லாம் சிறு வட்டம்னா, அந்த வட்டத்திற்குள் கடைசி வரை வாழ்ந்த ஆளுமையானை திருவள்ளுவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள் ? பழம் மட்டும் வேண்டும், மரம் வேண்டாமா ?
*
அன்புள்ள சங்கர்
இதேபோல இன்னும் இரண்டு வந்தன. எனக்கு எடுத்து அனுப்பியிருந்தனர். ஒன்றுக்கு விரிவான பதில் சொல்லியிருந்தேன். அதாவது தமிழ் விக்கி அடையாளத்தில் ஏன் கோபுரம் இருக்கிறது என்று. அது தமிழக அரசின் அடையாளம் என்பதுகூட தெரியவில்லை அவர்களுக்கு.
இன்னொன்று, ஔவையார் ஏன் மடிசார் கட்டியிருக்கிறார் என்பது. அந்த ஓவியமும் பாடநூல்களில் உள்ளவற்றை அடியொற்றியதே. ஔவையார் அக்காலத்தில் எவ்வகையாக உடையணிந்தார் என நமக்கு தெரியாது. அந்த ஓவியத்திலுள்ளது மடிசார் அல்ல, எம்ப்ளத்தின் மறுபக்கம் வரவேண்டும் என்பதற்காக படம் திருப்பப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.
யோசித்துப் பாருங்கள், ஒரு மாபெரும் அறிவுத்தள முன்னெடுப்பு. அதற்கு வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் இவையெல்லாம்.
அறிவுஜீவிகள் என்பவர்களின் எதிர்வினைகளும் இதே தரம்தான். சிறியவற்றில் திளைக்கும் சிறிய மனிதர்கள்…
ஜெ