ஆண்களின் அகங்காரம்

’’இதில போட்டிருக்கு…உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்கதான் போட்டு விடணும்ணு…” என்றேன். சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன்.

இதைப்படித்து நான் கண்ணீர் சிந்தினேன் இதே இடத்தில்….

சார்,

நான் என் மனைவியையும் மகனையும் மிகவும் நேசிக்கிறேன்….என் மனைவி மேல் அபார மதிப்பு உள்ளது …அவள் அதற்குத் தகுதி உடையவள் தான்,…அறிவு பூர்வமாக நான் பார்த்தால் கூட. .

ஆனாலும் பல முறை கோபத்தில் மனைவியை அடித்து விடுகிறேன்….முதிராத லட்சியத்திலா, இல்லை வெளி அழுத்தத்திலா தெரியவில்லை..

எனது மன ஓட்டம் ,தத்துவம்…,கீதை சார்ந்த ஆர்வம்…,நகைச்சுவை…,நான் முக்கியமாகக் கருதுபவை…எனது மனப் போராட்டங்கள் …, நான் அறமென நினைப்பது….,அலட்டக்கூடாதென்ற நினைப்பு….,புற உலக ஈடுபாடு…,அக உலக ஈடுபாடு…,என் மதிப்பீடு…(மனிதர்களைப்பற்றி மற்றும் படைப்புகளைப்பற்றி )எல்லாம் கிட்டத்தட்ட உங்களைப் போன்றது…(நான் பிராமண சமூகத்தில் பிறந்தவன்…ஆனால்…கீதை வழியாக…உண்மையான பிராமணன் என்பவன் பிரம்மனை உணர்ந்தவன்….பிறப்பு வழியினால் அல்ல…என்பதை உணர்ந்தவன் ஏற்பவன்…சாதீயத்தை என்றுமே நம்பாதவன்  )…My background is not the same as yours…And I have not gone through the same trauma as yours…But I somehow think I am going towards similar destination….

என் கேள்வி …மனைவியிடம் இத்துணை அன்பு மதிப்பு…இருந்தும்….ஒரு குடிகாரனப் போல இருப்பது…எதனால்….நான் பல psychologist களை நம்புவதில்லை…உங்களை நம்புகிறேன்…உங்கள் உதவி தேவை…அதை விட…உங்களுடன் உரையாடுதல் தேவை…

அன்புடன்

ஸ்ரீதர் விஸ்வநாத்

அன்புள்ள ஸ்ரீதர்

நானும் இதே மனநிலையில் இருந்திருக்கிறேன். அடிதடி இல்லை என்றாலும் உக்கிரமான கட்டுப்படுத்த முடியாத கோபம். இது ஏனென்றால் நாம் நம் அப்பாக்களிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். கோபம் ஆண்மகனுக்கு அழகு என அவர்கள் நம்பினார்கள். நாம் அந்த நடத்தையை ‘மிமிக்’ செய்கிறோம் , அவ்வளவே

அதற்கு அடியில் இருப்பது நம்முடைய ஆண் எனும் அகந்தை. இந்த அகந்தை பற்றி எனக்கு ஆழமான அருவருப்பு உண்டு. கன்யாகுமரி நாவலே அதைப்பற்றியதுதான். ஆண் என்பதனாலேயே நாம் மறுக்கப்படக்கூடாது, நாம் மையமாக இருக்கவேண்டும் என நம் ஆழ்மனம் விரும்புகிறது. ஆச்சரியம் என்னவென்றால் நம்மை நம் அம்மாக்கள்தான் அப்படிப் பழக்கியிருக்கிறார்கள்

மனதுக்கு ஒரு தனித்தன்மை உண்டு, அது சின்னப்பிள்ளைகளின்விளையாட்டு போலத்தான் நடந்துகொள்கிறது. நாம் அதைக் கவனித்தால் அதன் ஆட்டம் நின்று விடுகிறது. உண்மையான சுயபரிசோதனை, சுய கவனிப்பே போதும். நம்மை நாம் மாற்றிக்கொண்டுவிடலாம்

நித்யா ஒரு பெண்ணிடம் சொன்னார் ‘இன்னும் ஒரு நூறு வருடம் இந்திய ஆண்களைப் பெண்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த முட்டாள்கள் இப்படித்தான்’

ஜெ

முந்தைய கட்டுரைவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்
அடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி