இயற்கை,விஷம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

அஜிதனுக்கு ஆசிகள். பெங்களூரில் படிப்பு அவனுக்குப் பிடித்த வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். குருகு என்ற தலைப்பை மட்டும் பார்த்து விட்டு ஏதோ திருக்குருகூர் பற்றித்தான் எழுதியிருப்பீர்கள் என்று உள்ளே சென்று படித்தேன். தாமிரவருணியின் கால்வாய்களும், குளங்களும், பச்சை வயல் வெளிகளும் அவற்றில் நிறைந்திருக்கும் எண்ணற்றப் பறவைகளும் நினைவில் வந்து மனதைப் பிசைந்தன.
நீங்கள் இங்கு வந்திருந்த பொழுது நாம் பசிஃபிக் சமுத்திரத்தின் உள்ளே அமைந்திருந்த பறைவைக் குன்றில் நிரம்பியிருந்த எண்ணற்ற பெலிக்கன் பறவைகளைக் கண்டு கூழைக்காட்டான் என்று பெயர் சொன்னது நினைவில் உள்ளது. அந்தப் பறவைகளை நான் சென்ற முறை வந்திருந்த பொழுது தாமிரவருணியில் குளிக்கச் சென்றிருந்த பொழுது கண்டேன். வழக்கமாக கொக்குகளே நிறைந்திருக்கும் அந்த நதிக் கரையில் புது விதமான பறவைகளும் நிறைய இருந்தன.
நம் கவிஞர்கள் இயற்கையில் தோய்ந்த சூழலியல் அறிஞர்களாகவும் இருந்திருக்க வேண்டும். எத்தனை விதமான பறவைகள், விலங்குகள், மரங்கள், மலர்கள் நம் இலக்கியங்களில் அடையாளம் காட்டப் பட்டுள்ளன. இனி ஆழ்வார் திருநகரியைக் கடந்து செல்லும் பொழுதெல்லாம் குருகுடன் கூடிய எண்ணங்களும் தவிர்க்கவியலாது. தாமிரவருணியில் கண்ட சில பறவைகளை இங்கே காணலாம் https://picasaweb.google.com/rajansada/River# இவற்றில் ஏழிலும் எட்டிலும் இருப்பவை கூழைக்காட்டன்கள் என்றும் பிற பறவைகள் சாதாரண கொக்குகள் என்றும் நினைக்கிறேன்.
அன்புடன்
ராஜன்
======================================
சூழலைப் பற்றிய ஆவணப் படம். விமரிசனம் மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லிகள் (genetically modifiied insecticides) ஏற்படுத்தும்
மாறாத வடு, இன் தேனீக்களை ஓராயிரம் மைல்கள் இடம் பெயர்த்து – பாதாம் (almonds) பண்ணைகள்.மகரந்த சேர்க்கை முறை, பல இருப்பினும் மிக முக்கியமானது தேனீக்கள் மூலம்.
நிஜமாகவே.. மகாராணியின் (தேனீயின்) கதை – கண்ணீர் என்கிற அடைமொழி இல்லை. ஒரு விதத்தில் கண்ணீர் சிந்துமுன் வந்தெதிர் கொள்ளும் பேரழிவு.
முரளி
===============================================
இதை பற்றி யுங் சொன்னது ,http://www.youtube.com/watch?v=ceoB-tE5yWI 

ஒரு மனிதனுக்கு சில  ஆழ் மன அனுபவங்கள் தேவைப் படுகிறது (ecstatic  emotions an archetype ) . அதை முறையாகப் பெற முடியாத சுழலில், மனம் குடியை நாடுகிறது. யுங், ஒரு நோயாளியிடம்  (குடி அடிமைக்கு உள்ளானவன்)  கூறுகிறார், “உன்னால் கடவுளை உணர முடியவில்லை என்றால் குடியை நிறுத்த முடியாது :).”
நன்றி
அசோக்
=================================================
அன்புள்ள ஜெ
சிறப்பான கட்டுரை. ஒரு தளத்தில் யாரேனும் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் படித்திருப்பதாக செய்தி சொன்னால், அவரும் ஒரு நண்பரே என எண்ணத் தோன்றும். இந்தக் குறிப்புகளை நம் அன்றாடத்துடன் இணைத்திருப்பது ஒரு தனி அழகு.

 

அதே வீச்சில், மேலும் இருவரின் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தவை.
முதலாவதாக ஸ்டீபன் கௌல்ட் (Stephen J Gould)
ரிச்சர்ட் நோக்கிலிருந்து மாறுபட்டவர். பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் ஊற்றுக் கண்ணை வேறு விதமாகப் பார்த்தவர் (சில சமயம் அது  யதேச்சையானது எனச் சொல்கிறாரோ என தோன்றும். எட்டு பன்றி குட்டிகள் (Eight little piggies), Full House ஆகிய புத்தகங்களை மிகவும் ரசித்து இருக்கிறேன். Punctuated equilibrium என்கிற எண்ணத்தைத் தெரிவித்து அதனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளார்.
இரண்டாவதாக எட்வர்ட் ஒ வில்சன் (Edward O Wilson) மற்றுமொரு சிறந்த எழுத்தாளர். Sociobiology இல் நிபுணர் என்றலும், பரிணாமத்தில் இவரது சிந்தனைகள், மாற்று நீரோட்டமாக ஓடும். இவரது புத்தகங்களை நான் மிகவும் ரசித்தது உண்டு – மனிதர்களை  சமூக பூச்சிகளாகப் (social insects) பார்த்தார். தமிழில் மொழி பெயர்க்க தெரியாமல் இந்த குறிப்பு – Consilience, உயிரின் எதிர் காலம் (the future of life) – நான் ரசித்தவை.
உங்களுக்கு இந்தப் புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். இருப்பினும் ஒத்த சிந்தனையில் எழும் harmony மனதை நிரப்பும்.
நன்றி.
முரளி
முந்தைய கட்டுரைஅவதாரம் (சிறுகதை)
அடுத்த கட்டுரைஈழம் பற்றி கடிதங்கள்