நியூமெக்ஸிகோவில்…- வாசன் பிள்ளை

ஒரு நாள், இரு இரவு பொழுதுகள் இல்லத்தில் தங்கிவிட்டுச் சென்றார், எமது நாட்டில் அவர் மனைவியுடன் பயணத்தில் இருக்கும் ஜெயமோகன். பயணக் குழுவில் புதிதாகக் கிடைத்த நான்கு நண்பர்களுமுண்டு.

ஜெமோவும் நண்பர்களும், டெக்ஸஸிலிருந்து வரும் வழியில் பயணநிரலின் கடைசி நிமிட மாற்றத்தினால், பதினோரு மணி நேர கார் பயணம், இருபது மணி நேரமாக மாற, கூடுதலாகக் களைத்துப் போய் ஆல்புகர்க்கி https://www.visitalbuquerque.org/ வந்து சேர்ந்தனர். விருப்பத்துடன் அவர்கள் தடம் மாறி சென்று வந்த வெண்மணல் மேடு  https://www.nps.gov/whsa/index.htm நிச்சயமாக எல்லோராலும் கண்டு களிக்க வேண்டிய இடம்.

விருந்தினர்கள் இளைப்பாறும் விதமாக ஒரு குறிக்கோளில்லாத சுற்றலுக்கு அடுத்த நாள் அழைத்துப் போகலாம் என முடிவு செய்தேன். அமேரிக்காவின் [யூ எஸ்] தென்மேற்கு வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் எமது மாநிலத்தின் தலைநகரமான   https://www.santafe.org/  சேந்த ஃபே நகரத்தையும், அருகிலிருக்கும் இடங்கள் சிலவற்றை பார்த்து வருவதாக திட்டம்.

முன்பின் சந்தித்திராத ஜெயமோகன் மற்றும் பிற புதியத் தமிழர்களோடு சில மணிநேரங்களை பயனுள்ளாதாகவும், இனிமையாகவும் செலவழிக்க வேண்டும் என்பது திட்டத்தின் மிச்சப் பகுதி. மனைவியுடன், ஒரு சில உறவுகளிடம் தமிழ் அவப்போது பேச வாய்ப்பதைத் தவிர, தமிழ்த் தொடர்பு அற்றுப் போன எனக்கு , இந்நண்பர்களின் வரவு எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது, தமிழில் சலிக்காமல் பேசலாமே என்று**.

தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ள, பெரிய பரப்பளவிலான எமது மாநிலத்தின் ஓரிரு பகுதிகளை சுற்றிக் காட்டவே நேரமிருந்தது. எரிந்து கொண்டிருக்கும் பெரும் காட்டுத் தீயால் http://tinyurl.com/2022nmhpccfire சில இடங்களை தவிர்க்க வேண்டியதாகியது, முக்கியமாக  https://taospueblo.com/  டாவோஸ்  பெப்லோ [அமேரிக்க பூர்வீக குடியிருப்பு].ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமது பாரம்பரியங்களை இழக்காமல் இருந்து வரும் நிலமிது.

வீட்டிலிருந்து ஐம்பது நிமிட காரோட்டத்தில், அறுபது மைல் தொலைவில் சேந்தஃபே. தொன்மைகள் மாற்றமடையாமல்  இருந்து வரும் நகரம். வீடுகளும் மற்றக்கட்டிடங்களும் பழமையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கட்டப்பட வேண்டும். இதை ஒரு பெருமூச்சுடன் உடனே கண்டுணர்ந்தார் ஜேமோ. நகரத்தின் பழையபகுதி பிளாசாவை ஒரு சில சுற்றுகள் நடந்து வந்தோம். அற்புதமான தட்பவெட்பம். நரக டெக்ஸஸிலிருந்து சுவர்க்க வடக்கு நியு மெக்ஸிக்கோவுக்கு வருபவர்கள் எப்போதும் உடன் உணர்ந்து சொல்வதே இது.

https://www.nmartmuseum.org/ அருங்காட்சியகத்திலிருக்கும் ஓவியங்கள்

மற்ற படைப்புகளை பார்த்தப் பிறகு, டொற்கோய்ஸ் கல் பதிக்கப்பட்ட அமேரிக்க இந்திய வெள்ளி நகைகள் வாங்கச் சென்றனர், நண்பர்கள். ஒரு நண்பருக்கு, பெண்ணுக்கு மட்டும் வாங்கினால் மகன் சிணுங்குவான் என நேரத்தில் ஞாபகம் வந்தது. எமது நெடுங்கால தோழியான, நோர்வே க்காரரான சிஸில் வைத்திருக்கும் அமேரிக்க பூர்வீக இந்திய நகைக்கடை https://www.sisselsjewelry.com/ அருகே இருந்தது வசதியாக போயிற்று.

வெளி நடையிலிருந்த அமேரிக்க இந்தியரின் மரச்சிலையருகே புகைப்படங்கள் நண்பர்களால் எடுக்கப்பட்டன.

உலகின் தலை சிறந்த உணவு வகைகளிலொன்றான நியு-மெக்ஸிக்கோ உணவு https://www.gabrielsofsantafe.com/menu மதியத்திற்கு. கேப்ரியல் உணவகம் பெயர் பெற்றது. தாவிரப்பட்சிணிகள் கவலைப்பட பட வேண்டியதில்லை இங்கு.

அருகிலிருக்கும் நாம்பே இனத்து பூர்வீக இனநிலம் வழியே https://tinyurl.com/nambekudiyiruppu சென்று, அடுத்து சிமோயோ எனும் சிற்றூரில் இருக்கும் கத்தோலிக்க கோவிலுக்குச் சென்று வருவதென முடிவு செய்தோம். இக்கோவிலுக்குள் இருக்கும் மண் https://tinyurl.com/sakthiyullamann  சக்தியுள்ளதெனச் சொல்லப்படுகிறது. மண்ணை தண்ணீரில் போட்டு குடித்தால் நோய்கள் அகலும் என சொல்வார்கள். கதவு மூட அரை மணி நேரம் முன் சென்றதால் சக்தி மண் எங்கே எனக் கேட்க முடியவில்லை. ஜேமோ வும் நண்பர்களும் வீசிய இதமான இளங்குளிர் காற்றிலும், கோவில் உட் பிரகாரத்தின் அமைதி சூழலிலும் பல நிமிடங்கள் மவுனம் காத்தனர்.

நாம்பே யிலிருந்து சிமோயோ போகும் போது வழியிலிருக்கும் நாம்பே ஏரி, அதிலிருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சி என் ஞாபகத்திற்கு வந்தது. வீழ்ச்சியிலிருந்து வரும் ஓடையின் குளிர் நீர் நண்பர்களுக்கு பிடித்திருந்தது. ஆயினும் இந்தியா போல் குளிக்க அனுமதி கிடையாது, மேலும் நீர்க்குளிர் தாங்காது.

வீழ்ச்சி நோக்கி கற்பாதையில் பாதிவழி சென்று , நேரக்குறைவாலும், பாறைத்தடுப்பாலும் காருக்கு திரும்பினோம்.

வந்தவழியே போக வேண்டாமென ஒரு சுற்றுபாதையில் மெட்றிட் எனும் சிற்றூர் http://www.visitmadridnm.com/ வழியே நண்பர்களை அழைத்துச் சென்றேன். முன்னாள் ஹிப்பிகள் பெரும்பான்மையாக வாழுமிடம் இவ்வூர்.

எப்போதும் காற்றில் மிதக்கும் மூலிகை புகை இல்லாமலிருந்தது ஒரு ஏமாற்றமே. மெட்றிட் வட எல்லையில் கடவுளர்களின் தோட்டமெனும் கற்பூங்கா, வேலியிடப்பட்டு நுழைவு மூடியது, அங்கு நிறுத்திய போது, இருக்கும் பொந்துகளில் மூன்றடி நீளம் இருக்கக்கூடிய காக்கை போன்ற பறவையைக் கண்டார் ஜேமோ. கறுப்பாய் இருக்கும் இதன் பெயர் கறுப்புப் பறவை எனவறிந்து பிறகு சமாதானம் அடைந்தோம்.

வீட்டில் ஜேமோ வை சந்திக்க ஆவலுடன் அவருடைய நீண்ட நாள் வாசகர் அனுசுயா சுந்தரம் , குடும்பத்தினர் மற்றும் இரு தம்பதியினர் காத்திருந்தனர். சுவையான உணவு. நன்றி எமது மனைவி அவர்களுக்கு மட்டுமே. அடுத்தநாள் காலை வணக்கம் சொல்லி விடை பெற்றனர் நண்பர்கள்.

ஜேமோ மட்டும் சிறப்பாக, ‘ அடுத்த தடவை வரும் போது, வாசனுக்கு ஒழுங்காக** தமிழ் பேச’ கற்றுக் கொடுக்கணும் என சொல்லி பிரிந்து சென்றார். நண்பர்கள் ஒரு பத்து நிமிடம் கழித்து திரும்ப வந்து, ஜேமோ மறந்து விட்டுச் சென்ற 220 – 110 மின்மாற்றியை எடுத்துச் சென்றனர்.

இப்படியாக முடிந்தது ஒரு தலைசிறந்த இந்திய சிந்தனையாளர், தமிழ் எழுத்தாளரின் நியு மெக்ஸிக்கோ குறுகிய பயணம்.

இரு நாட்கள் இந்தியனாக இருக்க முயன்று, திரும்பவும் நியு மெக்ஸிக்கோ அமேரிக்கனாக நான் தற்போது, நிம்மதியுடன்…

வாசன் பிள்ளை

முந்தைய கட்டுரைஅ.ரெங்கசாமி, சாவுப்பேரழிவுகள்
அடுத்த கட்டுரைபரஸ்ஸினிக் கடவு முத்தப்பன்