மலபார் சந்திப்பு – கடிதம்

தேசாபிமானி செய்தி

முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்

அன்புள்ள ஜெ.

நலம்தானே?

காசர்கோட்டில் நிகழ்ந்த சந்திப்பு பற்றிய செய்திகள் மகிழ்ச்சி அளித்தன. பாலியகால நண்பர்கள் நட்புடன் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முப்பதாண்டுகளாக அலுவலகத் தோழர்கள் நட்புடன் நீடிப்பதை கேட்பதே ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அப்போதே அது வெறும் அலுவலக நட்பாக இருந்திருக்க முடியாது. அரசியல், சமூகம் ஆகியவற்றில் ஆர்வம்கொண்டவர்களோ இலக்கிய ஆர்வம்கொண்டவர்களோ ஆகத்தான் இருந்திருக்கமுடியும்

நானும் அலுவலகவேலை செய்தவன். அலுவலகத்தில் பேசிக்கொள்வதெல்லாம் அன்றாட அலுவல்களைப் பற்றி மட்டும்தான். அதில் மோதல்களும் சலிப்பூட்டும் செய்திகளும்தான் இருக்கும். ஆகவேதான் அலுவலக நட்புகள் ஆர்வமூட்டும் தனிப்பட்ட நட்பாக மாறுவதில்லை. உங்கள் நட்பு அலுவலகம் கடந்த ஒன்று என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

நல்லூர் செல்வராசன்

***

அன்புள்ள செல்வராசன்

உண்மை. நாங்கள் நட்பாக இருந்த காலத்தில் அலுவலக வேலைசார்ந்து ஒரு சொல்கூட பேசியதில்லை. அரசியல், இலக்கியம் மட்டும்தான்.

இந்த விழாவை நட்புக்கூடலாகவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் மெல்லமெல்ல பொதுவிழாவாக ஆகிவிட்டது.

ஜெ

முந்தைய கட்டுரைகரசூர் பத்மபாரதி நூல்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைஅ.ரெங்கசாமி, சாவுப்பேரழிவுகள்