அண்ணா ஹசாரே-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இது அண்ணா ஹசாரே பற்றிய கட்டுரை படித்துவிட்டு எழுதுகிறேன்.
இது போன்ற ஒரு உயர்ந்த நோக்கத்துடன் உயர்ந்த மனிதரால் நடத்தப்படும் போராட்டம் ஊடகங்களினால் திசை திருப்பி விடபடாமல் காப்பாற்ற உங்கள் கட்டுரையை ஆனந்த விகடன் தவிர மற்ற எதாவது ஒரு பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். இது மக்களை சென்று அடைய, இந்த ஒன்றிலாவது மக்கள் திசை திருப்பப் படாமல் ஒரே எண்ணத்துடன் அண்ணா ஹசாரே அவர்களுக்கு ஆதரவு எண்ணத்துடன் இருக்க ஆண்டவனைப் பிரார்திகின்றேன்
பல வருடங்களாக உங்கள் எழுத்துகளை வாசித்து இருந்தாலும் இது என்னுடைய முதல் கடிதம் ,மற்ற எண்ணங்களையும் கருத்துகளையும் விரைவில் பதிவு செய்ய விருப்பம்.

நன்றி

விஜய்
சென்னை

அன்புள்ள விஜய்

நீங்கள் என் கட்டுரையிலேயே ஒன்றைக் கவனிக்கலாம். இந்த வகையான கட்டுரைகளை வெளியிடும் இதழ்கள் எல்லாமே ஒரே குரலில் ஒரே அரசியலை பேசக்கூடியவை. மாற்றுத்தரப்பு விவாதம் என்பதற்கெல்லாம் அவற்றில் இடமில்லை.தமிழ் அறிவுச்சூழல் என்பது ஒருவகையில் உறைந்துபோன ஒன்று.
நான் இணையத்தில் மட்டுமே இன்று எழுத முடியும்.

ஜெ

 

***********
இது ஒரு சுய பெருமைக்கான கடிதமே

நான் அண்ணாவைப்பற்றி ஏற்கனவே நினைத்த கருத்து உங்கள் பார்வையை ஒத்தே உள்ளது

நமது ஒட்டுமொத்த மனசாட்சியின் ஒரு வடிவமே அன்னா ஹசாரே என நான் நினைகிறேன். இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் பல அன்னா ஹசாரேக்கள் தேவை. சமுக, பொருளாதார நிலையில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல அடிப்படை மாற்றம் தேவையே

-http://brillspot.blogspot.com/

**********

ஜெ,

இதில் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது

இந்தியாவிற்கு சமுக, பொருளாதார நிலையில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல அடிப்படை மாற்றம் தேவையே,நான் வாக்குச் சாவடிக்குச் செல்லவில்லை எனினும் , அண்ணாவின் போராட்டதிற்கு செல்வேன்.
for note: கோவையில் 10,000 மக்கள் அதரவு போராட்டத்தில் கலந்துகொண்டனர்

With regards

Karthik

*********
Dear Sir

I have been reading your blog more than a year. I came to your blog through some bad remarks about you in the internet. Though I don’t agree with few of your views, most of your views are logical, sincere and make sense. I just read your article on “Anna Hazera”, which I agree and had a thought in the same wave length.
My sincere respect to you.
Anbudan
Packirisamy N
Sydney.
***********
ஜெ,

மிக முக்கியமான சம கால அவதானிப்பு இந்த கட்டுரை.
சாதாரண வாழ்க்கையில், மிக முக்கியமான சம்பவங்கள் நடக்கையில், அவற்றின் முக்கியத்துவத்தை பல முறை கவனிப்பதில்லை. அவை முடிந்த காலத்தில், அவற்றைப் பற்றிப் பேசுகிறோம். விவாதிக்கிறோம்.

ஒரு தொழில் நிறுவனத்தில் கடைபிடிக்கப் படும் ஒரு பழக்கம், தொழில் முறையை மேம்படுத்தப் படும் யோசனைகள், அந்தந்த குழுக்களில் இருந்தே வரவேண்டும் என்பது. எடுத்துக் காட்டாக உற்பத்தித் துறையை மேம்படுத்த உதவும் யோசனைகளை, அத்துறையில் ஈடுபடும் ஊழியர்களே எடுத்து நடத்த வேண்டும் என்பது. (அத்துறையில் நடை பெற வேண்டிய மாற்றங்களை, மற்ற துறையினர் சொல்லும் முறையில்லை) இதை நடைமுறையில் செயல்படுத்துதல் கடினம். ஏனெனில், மேம்படுத்தலினால், அத்துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு சுயலாபம் கிடப்பதில்லை. அதனால், இது பொதுவாக வெற்றிகரமான ஒன்றாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, ஊழலை ஒழித்தால், அரசியலருக்கும், அரசு ஊழியருக்கும் ஒரு சுயலாபமில்லை. மாற்றாக, ஒரு சிறுபான்மையருக்கு நட்டமே. அச்சிறுபான்மையினர் அதற்கு எதிரான மறைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த முயற்சிகளை வீழ்த்துவர். பெரும்பான்மை, மௌனமாக இருக்கும். சுயலாபத்தை எதிர்பார்க்காமல், பொதுநலம் பேச மற்றும் செய்ய, (talk and do – not talk or do) ஒரு மாபெரும் அற உணர்வு வேண்டும்.

பொதுவாக, இன்றைய சந்தைப் பொருளாதாரச் சமூகம், எது வெற்றிகரமாக நடக்கிறதோ, எது அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கிறதோ, அதை ஜஸ்டிஃபை செய்து / உயர்த்திப் பேசுகிறது. எது சரியோ, அதைப் பேசும்/செய்யும் குரல்கள் கவனிக்கப் படுவதில்லை. அண்ணா, பொது வாழ்வில் இருந்து எழும் ஒரு கலகக் குரல். அவர் பொது வெளியைச் சுத்தம் செய்வது பற்றிப் பேசுகிறார். அதைப் பேச, இன்றைய சூழலில், மிகத் தகுதி வாய்ந்த ஒரு மனிதர். ராலேகானில் அவர் உழைப்பில் உருவான புது கட்டமைப்பே அத்தகுதி. பொது வெளியில் வாழ்ந்து, அதை முன்னேற்றும் பணிகளில் ஈடுபட்டு, இன்று, அது சம்பந்தமான இன்னும் ஒரு பெரும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

சாதரணர்களாகிய நாம், பொது வெளியை உபயோகிக்கும் ஒரு நுகர்வோர் மட்டுமே. அதை உபயோகிக்கும் போது, வரும் அசௌகரியங்கள் பற்றிப் பேசலாம். அவற்றை முன்னேற்றுவது பற்றியும் பேசலாம். அதே சமயம், அதையே தன் வாழ்க்கையாகக் கொண்டு, அதை முன்னேற்றும் செயல்களில் ஈடுபடும் ஒரு மனிதர், நம்மை விடத் தகுதியான ஒருவர் எழுந்து வரும்போது, அவருக்கு நாம் எப்படி உதவலாம் என்று யோசிப்பது, செயல்படுவது என்ற மாற்றம் என் போன்ற சாதாரணர்களுள் வருவதே மாபெரும் சமூக மாற்றமாக இருக்க முடியும். குறைந்த பட்சம், அது பற்றிய அறிதல்கள் இல்லாமல், குறை சொல்லும் ஒரு சமூகமாக இல்லாமல் மாற முயற்சி செய்யலாம். சினிக்கலாக, வெறும் குற்றம் மட்டுமே சொல்லும் குரல்கள், அந்தரங்கத்தில், ஊழலின் குரல்கள்தானோ?

அவற்றை எப்படி எதிர்கொள்வது?
பொதுவெளியை உபயோகிக்க வரி கட்டுகிறோம் என்ற குரலும் உண்டு. உண்மை. ஆனால், நம் வரியைச் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு கும்பலைச் சரி செய்யும் கடமையும் நமக்கு உண்டு. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்தல் ஒரு வழி. வாரியலை எடுத்துச் சுத்தம் செய்வது இன்னொரு வழி. இரண்டாவது, காலத்தே செய்யப் படுவது. மிகப் பெரும் பணி. மாநாட்டுப் பந்தல்களில் வெள்ளையர் ஆட்சி பற்றியும் சமூகப் பிரச்சினைகள் பற்றியும், மேட்டிமை விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த குஜராத்தியின் வழி.

பாலா

 

 

 

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது
அடுத்த கட்டுரைஅஞ்சலி,ர.சு.நல்லபெருமாள்