பொன்னியின் செல்வன், கடிதங்கள்

பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….

அன்புள்ள ஜெ.

பொன்னியின் செல்வன் பற்றிய மூன்று கட்டுரைகளுமே அருமையானவை. இன்று பொன்னியின் செல்வனை ஒட்டி தமிழர் அல்லாதவர்களும், சிறுவர்களும் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள்கூட சோழர்களைப்பற்றியும் ராஜராஜ சோழன் பற்றியும் கேட்கிறார்கள். அவர்களிடம் ஒரு துல்லியமான, சரியான விளக்கத்தை அளிக்கவேண்டியதுதான் கொஞ்சமாவது படித்தவர்களும் விஷயமறிந்தவர்களும் செய்யவேண்டிய வேலை. இது ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். நீங்கள் சொன்னதுபோல சோழர்களின் பெருமை என்பது தமிழகத்தின் பெருமை. அதைச்சொல்லவேண்டும். நம் தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லவேண்டும்.

ஆனால் அதற்கு கொஞ்சம் படிக்கவேண்டும். கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அதற்குரிய உழைப்பு இங்கே இல்லை. சினிமாவை வம்புகளாகவே பேசுபவர்களே மிகுதி. அவர்கள்தான் தங்களை சினிமா எக்ஸ்பர்ட் என நினைத்துக்கொண்டு நொட்டை நொள்ளை என பேசிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஒரு fan made வீடியோ வந்ததற்கு பொங்கித் தள்ள்விட்டார்கள். இந்தக்குரல்கள்தான் இங்கே ஜாஸ்தி என்பது பெரிய துரதிருஷ்டம்.

ராகவ்

***

அன்புள்ள ராகவ்,

எதையாவது படிப்பவர்களின் குரல்கள் இங்கே ஒலிப்பதில்லை. வம்புபேசும் ஒரு பெரும்கும்பலே ஓங்கி ஒலிக்கிறது. உண்மை. ஆனால் தொடர்ச்சியாக விஷயமறிந்தோர் பேசவேண்டும். அதற்குரிய ஒரு வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வரும்.

ஜெ

***

அன்புள்ள ஜெமோ

பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி சொன்னதை எப்படி பார்க்கிறீர்கள்? சோழர்காலம் பொற்காலம் என்று சொல்லும்போது நீங்கள் ரஞ்சித் சொன்னதை மறுக்கிறீர்களா?

செல்வன்

***

அன்புள்ள செல்வன்

நான் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். பார்க்கவும்

ஜெ

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

***

முந்தைய கட்டுரைசியமந்தகம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதைகள் -தேவதேவன் சிறப்பிதழ்