பாலிண்ட்ரோம் – கடிதங்கள்

அன்பு ஜெமோ

http://www.jeyamohan.in/?p=14200 – இந்தப் பதிவில் ஒரு வாசகர் Palindrome என்பதற்கான தமிழ்ச்சொல் எதுவெனக் கேட்டு இருந்தார். நீங்கள் தமிழ்ச்சொல் இல்லை என்றும் முன்பு செய்யுள் மரபில் அப்படி ஒரு வகை இருந்தது. அதற்கு விகடகவி என்று பெயர். அதை திருப்பிச்சொன்னாலும அதுவே வரும். உரைநடையில் ஒரு பெயர் உருவாக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன் என்றும் எழுதி இருந்தீர்கள்.
விகடகவி என்பது ஒரு பாலிண்ட்ரோமே தவிர அது செய்யுள் வகைக்குப் பெயர் இல்லை. பாலிண்ட்ரோமாக எழுதப்படும் பாடல்களுக்கு மாலைமாற்று எனப் பெயர். அதையே தமிழில் பாலிண்ட்ரோம் என்பதற்கு இணையாகச் சொல்லலாம். இதற்கு இருவழியொக்கும் சொற்கள் என்று சிலர் சொல்லுகின்றனர். ஆனால் மாலைமாற்று என்றே முன்னர் தமிழில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மாலைமாற்று செய்யுள் என்பதன் இலக்கணமாக
“ஒரு செய்யுள் முதல்,

ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை
மாலை மாற்றென மொழி”

என்று சொல்லுவார்கள்.  திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப் பதிகம் மிகவும் புகழ் பெற்றது. தமிழில் னகரத்தில் சொற்கள் ஆரம்பிக்காது என்பதாலும் நகரத்தில் முடியாது என்பதாலும் நகர, னகர, ணகரங்களை ஒன்றாகக் கருதுவது வழக்கம்.
நன்றி
இலவசக்கொத்தனார்

அன்புள்ள ராஜேஷ்

தகவலுக்கு நன்றி. எனக்கு தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் நினைவில் இருந்து சொல்லக்கூடாது, கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ.,
Palindrome என்பதற்கு மாலைமாற்று அல்லது அதன் வழிச்சொல்லோ( derivative word) சரியாக இருக்குமா? ( மாலைமாற்று பதிகம் எங்கோ படித்த நினைவு.முழு செய்யுளும் இரு திசைகளிலும் பொருள் தரும்)
நன்றி
முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஜயன் பாலா