புறவயமாகப் பார்த்தால் தமிழுலகம் மூன்றாகப் பிரிந்திருக்கிறது. இந்தியா, இலங்கை, மலேசியா என்னும் மூன்று நாடுகளிலாக. மூன்று அரசியல் வட்டங்கள் அவை. மூன்று வகை வாழ்க்கைமுறைகளும்கூட. ஆனால் பண்பாட்டுத்தமிழகம் என்பது இம்மூன்று மண்டலங்களும் இணைந்த ஒரு வெளிதான்.
ஒரு கலைக்களஞ்சியம் மொழியில் அந்த பண்பாட்டுத்தமிழகத்தை உருவாக்குகிறது. அ.ரெங்கசாமி போன்ற முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களை தமிழகம் தங்களவர்களாக உணரும் ஒரு களம் அது.
ஆனால் நம் உறவுகளுக்கு நிகழ்ந்த வரலாற்றுப் பேரழிவின் எளிய சித்திரம் நம்மை வந்தடைய அரைநூற்றாண்டு ஆகியது. ரங்கசாமியின் நினைவுச்சின்னம் வரவேண்டியிருந்தது.