இலக்குவனார்

இலக்குவனார் சிறிதுகாலம் நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் பணியாற்றினார். அன்று அவரிடம் தமிழ் பயின்றவர்கள் அவருடைய செந்தமிழ்ப்பித்து பற்றி பல வேடிக்கைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ‘உசாவி வருக’ என்று சொன்னதை சிரமேற்கொண்டு ஒரு மாணவன் உஷாதேவி என்னும் மாணவியை அழைத்து வந்தது ஓர் உதாரணம்.

ஆனால் வாழ்நாள் முழுக்க ஒரு போராளியாக திகழ்ந்தவர் இலக்குவனார். எல்லா ஆட்சிக்காலத்திலும் தமிழுரிமைக்காக போராடி தண்டனைகளை அடைந்தவர். ஊர் ஊராக வேலைமாற்றம் செய்யப்பட்டவர். மிகையூக்கமும் மிகைப்பற்றும்  அறிஞர்களுக்குரிய பண்புகள். ஒரு பண்பாட்டின் அடித்தளத்தை நிலைநிறுத்துபவர்கள் இலக்குவனார் போன்ற அறிஞர்கள்.

இலக்குவனார்– தமிழ் விக்கி

இலக்குவனார்
இலக்குவனார் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபடைப்பாளியின் தவமும் படைப்பின் உணர்வுத்தீவிரமும் – பி.கே.பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅறிஞர்களின் தவறுகள்