ஒரு பதிவு

அன்பு  ஆசான் அவர்களுக்கு ,

வணக்கம் ஆனந்தன். கடந்த 14 வருடங்களாக மந்திரம் போன்று உங்களை வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன். நான் எனது 21 வருட பள்ளி /கல்லூரி படித்ததை விட, உங்கள்  தளம் மூலம் கற்றுக் கொண்டது மிக அதிகம். நவீன இலக்கிய பற்றிய தெளிவும், தேடலும் உங்களால் மட்டுமே கிடைத்தது. எத்துணை கதைகள். எத்துணை எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள். தமிழ் இலக்கியத்தை பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் ஒரு இலக்கிய பள்ளிக்கூடம் (Jemo academy என்றே சொல்வேன்). தமிழ் விக்கி பற்றிய செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. திக்கெட்டும் நல்ல  தமிழ் இலக்கியத்தை பரப்ப எடுத்திருக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

மிக நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பல மின்னஞ்சல் draft ஆகவே உள்ளன.வெகு நாட்களாக யோசித்து இன்று சிறு கடிதமாவது எழுதியே தீர வேண்டும் என்று எழுதியது. மன்னிக்கவும்

நான் ஒரு சிறு வலைத்தளம் ஆரம்பித்து நான் படித்த புத்தகங்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளை எழுதி வருகிறேன். சமீபத்தில் உங்கள் தளத்தில் பகிர்ந்திருந்த தெய்வீகனின் இருள்களி மிக முக்கியமான சிறுகதை. எந்த யுத்தமாயிருந்தாலும் அதில் மிகவும் பாதிக்கப்படுவது பெற்றோரே. அவர் மிக அருமையாக இலங்கை யுத்தத்தையும், ஆஸ்திரேலிய கலிப்போலி யுத்த பாதிப்பையும் மிக அருமையாக இணைக்கும் ஒரு இரவு.

அந்த புத்தகத்தை பற்றி எனது வாசிப்பனுபவத்தை  வலைதளத்தில் எழுதியிருக்கிறேன்.

வாசித்தலும் யோசித்தலும்

முந்தைய கட்டுரைMeet the Author at Walnut Creek
அடுத்த கட்டுரைடாலஸ் சந்திப்பு