நான் கடவுள்:இணைப்புகள்

அன்புள்ள ஜெ

நான் உங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். முன்னரே ஒருமுறை உங்களிடம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன்.படத்தை காட்சி பூர்வமாகப் பார்ர்கும் தன்மை எனக்கு உண்டு. ஆகவே எனக்கு பாலாவின் படங்கள் மிகவும் பிடிக்கும் . உங்கள் எழுத்தும் பிடிக்கும். ஆனால் உங்கள் எழுத்துக்களைப்பற்றி எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அந்த அளவுக்கு விஷயம் போதாது

ஆனால் பாலாவின் இந்தபப்டம் எனக்கு மிகவும் பிடித்தது. இதுதான் அவரது படங்களிலேயே மிகச்சிறந்த படம். பான் ஷாட்ஸ் இந்தப்படத்தில்தான் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்படிருக்கின்றது. ஒரு உலகத்தை ஒட்டுமொத்தமாகக் காட்டுவதற்கு உரியது பான் ஷாட். இந்தபப்டத்தில் ஒரு காட்சி. பிச்சைக்காரர்கள் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுகிறர்கள். சிலர் பசியுடநும் சிலர் வெறியுடனும் சாப்பிடுகிறார்கள். துக்கமும் மனக்கலக்கமும் அளிக்கும் காட்சி அது. ஆனால் காமிரா அத்தனைபேரையும் காட்டிக்கொண்டே சென்று அங்கே முருகன் சிறுவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதையும் அவர்கள் சிரிப்பதையும் காட்டுகிறது. இந்த ஒட்டுமொத்தத் தன்மைதான் பான் ஷாட் மூலம் நல்ல இயக்குநர் காட்டுவது. தமிழில் 90 சதவீதம் பேருக்கும் இது தெரியாது. ஏராளமான இடத்தை காட்டுவதற்குத்தான் அதை பயன்படுத்துவார்கள்.

பொதுவாக நம் அறிவுஜீவிகள் எப்படியெல்லாம் படத்தைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளத்தான் நான் இந்த விமரிசனங்களை எல்லாம் படிக்கிறேன். ஒரு அடிப்படை சினிமா ரசனை கூட இல்லாமல் எழுதுகிறார்கள் என்று தோன்றியது. இந்த ஷாட்டை அந்தபப்டத்திலே வைத்திருக்கிறாரே என்கிறார்கள். ஒரு ஷாட் என்பது ஒரு சொற்றொடர் அமைப்பு போல. அந்த ஷாட் எதைக் காட்டுகிறது என்பதுதான் முக்கியம். வித்தியாசமாக காட்டவேண்டுமென்று தலைக்குமேல் காமிராவைக் கொண்டுபோகமுடியுமா என்ன? ஒன்றுமே தெரியாமல் இருப்பது தப்பில்லை. அப்படித்தான் எல்லாரும் படம் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றுமே தெரியாமல் இருந்துகொண்டு உலகசினிமா தெரிந்ததுபோல் எழுதுவதைப்பார்க்கும்போது எரிச்சலாகவும் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது

சீக்கிரமே ஒரு நல்ல படத்துடன் நாம் சந்திப்போம்

http://www.rasanaikaaran.com/

http://rajkumarkuwait.blogspot.com/2009/02/blog-post_10.html

http://ezhuchigal.blogspot.com/2009/02/blog-post.html

http://honey-tamil.blogspot.com/2009/02/blog-post_09.html

சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]

அன்புள்ள சண்முகம்,

 
இப்போது இந்த விமரிசனங்களை வாசித்தால் நான் நேரத்தை இழப்பேன். நான் இப்போது அவசரமாக இன்னொரு சினிமா எழுத்தில் இருக்கிறேன். இணையதளத்துக்கு எழுதிச்சேர்க்க வேண்டும்– பயணம் இருக்கிறது. படித்துவிட்டு விரிவாக எழுதுவேன்.

எழுதுபவர்கள் எழுதட்டும். இத்தனை எழுதித்தள்ளுகிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது

ஜெ

நான் கடவுள், இன்னும்

நான் கடவுள்:மீண்டும் கடிதம்

நான் கடவுள், கடிதம்

மதுபாலா:கடிதங்கள்

மதுபாலா

முந்தைய கட்டுரைமத்தகம்:கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்