நிருதன் நாவலில் மிகச்சிறிய பாத்திரம், ஆனால் அம்பையை கொற்றவை ஆகும் முன்பே தேவியாக கண்டவர், அம்பையிடன் உங்களுக்கு அநீதி இழைத்தவர் முன்பு சங்கறுத்து சாகுகிறேன் என்று சொன்னவர், அம்பையை காண பித்தனாக காத்திருந்தவர், அம்பை தீக்குள் இறங்கிய போது துக்கம் தாளாமல் மனம் உடைந்தவர். ஒரு கதையின் மைய இழைக்குள் வரவே வாய்ப்பில்லாத ஒரு படகோட்டி, தன் செயலால் மைய கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறார்.
வெண்முரசு தொடர்பானவை முதற்கனல் வாசிப்பனுபவம்