சியமந்தகம்- கடிதங்கள்

சியமந்தகம்

அன்புள்ள ஜெமோ,

உங்களின் இந்த புகைப்படம் இதற்கு  முன்பு பொது வெளியில் இருந்ததா என்று தெரியவில்லை. இன்று தான் முதல் முறை தங்கள் தளத்தில் சியமந்தகம் கட்டுரையில் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சிறிது நேரம் பார்த்தால் உங்கள் சிரிப்பு இன்னும் விரிவது  போல் உள்ளது. இன்னும்  சற்று  நேரம் பார்த்தால் பேசி விடுவீர்கள் என்று தோன்றுகிறது. உங்களை மிக அணுக்கமாக உணர வைக்கும் ஏதோ ஒன்று இதில் உள்ளது. அதுவும் தற்போது தான் தங்களை ஈரோடு சந்திப்பில் பார்த்ததால் இன்னும் அணுக்கமாக தெரிகிறது. இது வரைய பட்ட ஓவியமா அல்லது புகைப்படம் ஓவியம் ஆக்கப்பட்டதா..? எதுவாயினும் இந்த  “ஜெயலிசா” ஓவியத்தை வரைந்தவருக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்.

நன்றி
பிரதீப்

***

அன்புள்ள ஜெ

நான் இப்போது மிக ஈடுபட்டு வாசிக்கும் தளம் சியமந்தகம். அருண்மொழி நங்கையின் கட்டுரைகளுக்காக வாசிக்க ஆரம்பித்தேன். அதன் பின் என் பிரியத்துக்குரிய நாவலான இரவு பற்றி பெருந்தேவி எழுதிய கட்டுரைக்காக வாசித்தேன். அதன்பின் தொடர்ச்சியாக கட்டுரைகள். உங்களை வெவ்வேறு கோணத்தில் காட்டுபவை. அரிய புகைப்படங்கள். மிக முக்கியமான ஒரு ஆவணத்தொகை இது

ராஜன் மகாதேவன்

***

முந்தைய கட்டுரைகேட்பவனும் சொல்பவனும்- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி, இறுதிச்சொல்