கலைக்களஞ்சியம்- கடிதங்கள்

கலைக்களஞ்சியம் என்றாலென்ன என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொல்லத்துணிவேன். க.நா.சு பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதிலுள்ள தொடுப்புகள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தேன். இதில் இருந்தே ஒரு நூறுபக்க நூலை எழுதிவிடமுடியும். க.நா.சு பற்றிய பதிவு. அவருடைய நூல்கள் பற்றிய பதிவுகள், அவருடைய பத்திரிகை பற்றிய பதிவுகள், அவருடைய இலக்கிய நண்பர்கள் பற்றிய பதிவுகள் என்று இருபது பதிவுகள் தேறும். ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர வாசிப்பு. எவ்வளவு செய்திகள். இன்னும் இது விரியும். இலக்கியத்துக்கு இது பெரும் கொடை. வாழ்த்துக்கள்

ஜெயராமன்

அன்புள்ள ஜெ

எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெரியசாமித் தூரன் இருவரையும் பற்றி நான் பெயர் கூட கேள்விப்படவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அந்தப்பதிவுகளை படிக்க படிக்க எத்தனை மொண்ணையாக இருந்திருக்கிறோம் என்னும் சலிப்புதான் உருவானது. அதிலும் பெரியசாமி தூரனின் இசைப்பாடல்கள் ஒவ்வொன்றாகச் சொடுக்கி கேட்க கேட்க எங்கேயோ இருந்தேன். அற்புதமான மகத்தான அனுபவம். என் வரலாற்றை, என் முன்னோடிகளை எனக்கு மீட்டு அளித்திருக்கிறது தமிழ் விக்கி

கணேஷ் ஆறுமுகம்

முந்தைய கட்டுரைரப்பர் – வாழ்வும் மரணமும்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கியில் வண்ணதாசன்- கடிதம்