க.நா.சு- ஆலமரத்து வேர்

ஓர் உரையில் நான் க.நா.சு பற்றி எட்டு முறை குறிப்பிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். “அவரை மறந்திரக்கூடாதுன்னு நீங்க முயற்சி பண்றதா தோணுது சார்” என்றார்

“இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான மாபெரும் போர்தான்” என்று நான் பதில் சொன்னேன்.

ஆனால் வேர்களை நினைவுறுத்தவேண்டுமா என்ன? ஒவ்வொரு இலையும் வேரின் நினைவுச்சின்னம் அல்லவா? க.நா.சு ஆலமர வேர். நீண்டகாலம் முன்பு எங்கள் பழைய வீடு ஒன்றை இடித்தோம். அஸ்திவாரம் முழுக்க ஆலமரத்தின் வேர் பரவியிருந்தது. உண்மையில் அந்த வேர்ப்பின்னல் மீதுதான் வீடே அமைந்திருந்தது. ஆலமரம் முந்நூறடி அப்பால் ஆற்றங்கரைச் சரிவில் இருநூறாண்டுகளாக நின்றிருந்தது.

க.நா.சுப்ரமணியம்
க.நா.சுப்ரமணியம் – தமிழ் விக்கி

க.நா.சுப்ரமணியம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஹார்வார்ட் பல்கலையில் இருந்து
அடுத்த கட்டுரைசியமந்தகம், கடிதங்கள்