தமிழ் விக்கி தொடக்கவுரை

மதிப்பிற்குரிய ஆய்வாளர் பிரெண்டா, மொழிபெயர்ப்பாளர் தாமஸ், பேராசிரியர் வெங்கடரமணன், நூலகர் சேங்க் லியோ மற்றும் அவையில் உள்ள அனைவருக்கும் என் வணக்கம்.

இந்த அரங்கில் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தை திறந்து வைத்தமைக்கு என் சார்பிலும் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அ.கா.பெருமாள், நாஞ்சில்நாடன், மௌனகுரு, மா.சுப்ரமணியம் சார்பிலும் தமிழ்விக்கி ஆசிரியர்களான பேராசிரியர் சிவக்குமாரன், பேராசிரியர் தே.வெ.ஜெகதீசன், ப.சரவணன், சோ.தர்மன், சுசித்ரா மற்றும் சுனீல் கிருஷ்ணன் சார்பிலும் தமிழ் விக்கி நிர்வாகிகளான மதுசூதனன், சந்தோஷ், சைதன்யா சார்பிலும் மற்றும் விக்கி பங்களிப்பாளர்களான என் நண்பர்கள் அனைவர் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் எங்களுக்கு மிக முக்கியமானது. இது பல்லாயிரம் அறிவியக்கங்கள் நிகழ்ந்த அமெரிக்க மண்ணில் நிகழ்வது பெருநிறைவு அளிக்கிறது. என் வணக்கத்திற்குரிய அமெரிக்க ஆசிரியர்கள் எமர்சன், தோரோ, ஐசக் பாஷவிஸ் சிங்கர் ஆகியோரை இத்தருணத்தில் வணக்கத்துடன் நினைத்துகொள்கிறேன்.

தமிழ்க் கலைக்களஞ்சியம் தமிழின் இலக்கியம் பண்பாடு சார்ந்த செய்திகளை ஓர் இடத்தில் தொகுக்கும் முயற்சி. பிழைகள், சவால்கள் வழியாக கற்றுக்கொண்டு முன்னகர்வதற்கான முன்னெடுப்பு. ஒரு வாசகர் அமைப்பு இதன்பின் உள்ளது. இந்த முயற்சி மேலும் தொடரவேண்டும். அதற்கு இன்னும் இளைஞர்கள் உள்ளே வரவேண்டும்.

இன்று நாங்கள் தமிழ்விக்கி அமைப்பு சார்பில் கலைக்களஞ்சிய முன்னோடி பெரியசாமி தூரன் நினைவாக தமிழ் விக்கி தூரன் விருது ஒன்றை அறிவிக்கிறோம். இது பண்பாட்டுத் தளத்தில் சேவை புரிந்தவர்களுக்கான விருது.

எங்கள் செயல்பாடுகள் சிறப்புறவேண்டும். என் ஆசிரியர்கள் அனைவரையும் வணங்கிக்கொள்கிறேன்.

ஆங்கிலம்

Dear professors Brenda, Thomas, Venkataramanan, Chang Liu and all my friends gathered here, I wish you all a good morning.

Today, in this gathering, we have declared the Tamil Wiki encyclopedia officially open. On behalf of my esteemed teachers Professor A.K.Perumal, writer Naanjil Nadan, Prof. Mounaguru, Prof. Ma. Subramaniyam, as well as the editors of Tamil Wiki, Prof. Sivakumaran, Prof. T.V.Jegatheesan, Prof. Pa. Saravanan, Writers Cho. Dharman, Suchitra, Sunil Krishnan, the coordinators of Tamil Wiki, Madhusudhanan, Santhosh, Chaidhanya, as well as my dear friends who have contributed articles and translations to Tamil Wiki, I thank you all for making this possible.

This is an important day for us. Personally, it gives me immense satisfaction that this important event should be happening on American soil, one that has given birth to many many intellectual movements of great significance to humanity. At this hour, I recall my American teachers, Emerson, Thoreau and Isaac Bashevis Singer and pay my humble respects to them.

The Tamil encyclopedia is an attempt to systematically organise information pertaining to Tamil literature and culture in a single place. No doubt, this effort will involve learning from our mistakes, and responding to challenges as they arise in order to make progress. This endeavour is currently being supported by a group of dedicated readers. These efforts should continue, unflagged. We need more youngsters to come in and take the torch forward.

On this day, on behalf of the Tamil Wiki organisation, we would like to make a formal announcement about the institution of the Tamil Wiki Thooran Award. We institute this award in memory of Periyasamy Thooran, the legendary figure who edited and brought out the first encyclopedia of modern Tamil. This award will be given to individuals who make significant cultural contributions to Tamil society.

We pray that efforts in this direction should prosper. I offer my respects to all my teachers and Gurus.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- விழா
அடுத்த கட்டுரைஅந்த ஆள்