தமிழ் விக்கி- முதல்பதிவு

தமிழ் விக்கி இணையம்

மே 7,2022ல் தொடங்கப்படும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் முதல்பதிவாக பெரியசாமித் தூரன் பற்றிய பக்கம் இருக்கவேண்டும் என்று அனைவருக்கும் எண்ணமிருந்தது. நவீனத் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர். நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர். ஆனால் புறக்கணிக்கப்பட்டவர். எங்கள் இந்த முயற்சி அவருக்கு ஓர் எளிய சமர்ப்பணம். எந்த மெய்யான பெரும்பணியும் அறிவுக்களத்தில் மறைந்துவிடாது என நாங்கள் எங்களுக்கே சொல்லிக்கொள்வதும்கூட.

ஒரு கலைக்களஞ்சியப் பதிவு எப்படி இருக்கவேண்டும், எங்கள் நோக்கம் என்ன என்பதற்கான உதாரணமாகவும் இதை முன்வைக்கிறோம். இப்பதிவு தூரன் பற்றிய கிடைக்கும் தரவுகள் அனைத்தையும் நூல்கள், பதிவுகளில் இருந்து சேர்த்து அளிக்கிறது. மேலும் திருத்தவும், விரிவாக்கவும் இடமளிக்கிறது. மிக விரிவான உசாத்துணைகள், இணையத் தொடுப்புகள் வழியாக மேற்கொண்டு வாசிப்பதற்கு வாய்ப்பளிக்கிறது.

அத்துடன் இது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளிணைப்புகளை அளிக்கிறது. தானியங்கி முறையில் அளிக்கப்படும் உள்ளிணைப்புகள் நடைமுறையில் பயனற்றவை. இதில் உள்ள உள்ளிணைப்புகள் இத்துறை சார்ந்த வாசிப்பு கொண்டவர்களால் செய்யப்படுபவை. பெரியசாமித் தூரனில் இருந்து கவிமணி தேசிகவினாயகம் பிள்ளைக்கும் நாமக்கல் கவிஞருக்கும் ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கும் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கும் செல்லும் உள்ளிணைப்புகள் ஒரு நூல் போல விரியக்கூடியவை.

வெறும் தகவலடுக்காக இல்லாமல் இனிய வாசிப்புக்குரிய மொழிநடையில் இந்த தளம் அமைந்துள்ளது. இவ்வாறே இது விரியவேண்டும். இது அறிவியக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அதில் செயல்படுபவர்களுக்கு மட்டுமான ஒரு தளம்.

தமிழ்விக்கி

பெரியசாமித் தூரன்  

முந்தைய கட்டுரைஹிட்லரும் வாக்னரும்- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது