அந்த ஆள்

அன்புள்ள ஜெ

பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் எழுத்தாளர் ஜெயமோகனை நீங்கள் மிகவும் மட்டமாக சித்தரித்துள்ளீர்களே. ஏதேனும் முன்பகையா? ஏன் இவ்வளவு வன்மம்?

மணிமாறன்

***

அன்புள்ள மணிமாறன்

ஏனென்றால் அந்த ஆளை எனக்கு மிக நன்றாகத் தெரியும். பிறந்தநாள் முதல் அவனை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவனுடைய ஆணவம், முந்திக்கொண்டே இருக்கும் தன்மை, கட்டற்ற தன்மை எல்லாமே அவன் எழுத்தாளன் என்பதனால் மட்டுமே மன்னிக்கத்தக்கவை. ஆனால் அது அவன் எழுதும் எழுத்துக்குள் செல்லுபடியாகும் சலுகை அல்ல இல்லையா?

என்னுடைய எந்த படைப்பிலும் அந்த ஆள் இனியவனாக, நல்லவனாக வந்ததே இல்லை.

ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தொடக்கவுரை
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, கடிதங்கள்