ஐயா,நான் தங்கள் ஜெயமோகன் வலைதளத்தை Subscribe பண்ண விரும்புகிறேன்.
தங்கள் தொடர்பு லிங்கை அனுப்பவும்.
நன்றி.
தா.சிதம்பரம்.
***
அன்புள்ள சிதம்பரம்
https://feedburner.google.com/fb/a/mailverify?uri=jeyamohan&loc=en_US
https://feeds.feedburner.com/jeyamohan
என்னும் இரு இணைப்புகள் உள்ளன. அவற்றின் வழியாக சப்ஸ்கிரைப் செய்யலாம். ஆனால் கட்டணம் ஏதும் இல்லை. பெரும்பாலானவர்கள் இப்போது தங்கள் கணிப்பொறியில் நிரந்தர இணைப்பு வைத்து வாசிக்கிறார்கள்.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக வாசிக்கிறேன். அதற்கு நான் பணம் செலுத்தவேண்டுமென்று எண்ணுகிறேன். எப்படிச் செலுத்துவது?
ஆர்.கே.எம்.
***
அன்புள்ள ஆர்.கே.எம்
நாங்கள் இணையதளத்தை இலவசமாகவே நடத்துகிறோம். ஆகவே இணையதளத்துக்கு நன்கொடை பெறுவதில்லை. விஷ்ணுபுரம் விருதுவிழா போன்றவற்றை ஒட்டி, அனேகமாக ஆண்டுக்கு ஒருமுறை நிதி பெறுகிறோம். அப்போது அறிவிப்போம். அவ்வகையில் நிதியளிக்கலாம்
ஜெ
***