யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்

யானைடாக்டர் -தன்னறம்

மலைவாச ஸ்தலங்களில் மதுபானக் கடைகளில் கண்ணாடி பாட்டிலுக்கு பதிலியாக விரைந்து வேறு கலன் காண அரசுக்கு இன்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் கடைகளை மூட உத்தரவிட நேரிடமென கடுமை காட்டியுள்ளது. செய்தி கேட்ட அடுத்த நொடி யானைடாக்டர்  நினைவிற்கு வந்தார்.  இதனை கட்டளை எனக்கருதாமல் கடமையென கருதி அரசு  உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும்.

icf சந்துரு

பிரஸ் காலனி, கோவை -19.

***

அன்புள்ள ஜெ

மலைநிலங்களில் மதுபானங்கள் கண்ணாடிப்புட்டிகள் பயன்படுத்தக்கூடாது, பிளாஸ்டிக் அல்லது வேறு பொருட்களை பயன்படுத்தவேண்டும். உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடைகளை மூட ஆணையிடவேண்டியிருக்கும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக ஆணையிட்டிருக்கிறது. எவரும் சொல்லப்போவதில்லை என்றாலும் சென்ற  பன்னிரண்டு ஆண்டுகளாக யானைடாக்டர் சிறுகதை உருவாக்கிய வலுவான கருத்துருவாக்கத்தின் விளைவு இது என வாசிப்பவர் அறிவார்கள். அதற்காக காட்டுப்பயணி என்ற முறையில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் டாக்டர் கே யை 1992 முதல் அறிவேன். அவர் வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் புகழ்பெறவில்லை. ஆனால் சட்டென்று ஒரே கதை வழியாக ஒரு லெஜெண்ட் ஆகிவிட்டார். பள்ளிமாணவர்கள் படிக்கும் கதையாக, ஒரு செவிவழிக் கதையாக அவருடைய வரலாறு மாறிவிட்டது. ஒரு கதை என்னென்ன செய்ய முடியும் என்பதற்குச் சமகாலத்தில் யானைடாக்டர்தான் மிகப்பெரிய சான்று.

வணக்கம்

செல்வக்குமார் முருகேசன்

முந்தைய கட்டுரைஇமைக்கணம்,கடிதம்
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டி,கடிதங்கள்